Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அமெரிக்க ராணுவ முகாம்களுக்கு அனுமதி:கொலம்பியாவுடனான வர்த்தகத்தை நிறுத்திக்கொண்டது வெனிசுலா.

கொலம்பியாவுடன் வர்த்தகத்தை நிறுத்திக் கொண்ட வெனிசுலா தன்னுடைய இறக்குமதிகளை ஈடுகட்ட மற்ற அண்டை நாடுகளை அணுகி வருகிறது. அமெரிக்க ராணுவ முகாம்களுக்கு கொலம்பியா அனுமதி அளித்ததை எதிர்த்து வெனிசுலா இந் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அர்ஜென்டினாவுடன் சுமார் 110 கோடி டாலர் மதிப்புள்ள ஒப்பந்தம் ஒன்றை வெனிசுலா நிறைவேற்றியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி வெனிசுலா டிராக்டர்கள், இறைச்சி மற்றும் அரிசி ஆகியவற்றை இறக்குமதி செய்யும். கொலம்பியாவுடன் சுமார் 10 ஆயிரம் வாகனங்கள் வாங்கும் வர்த்தகத்தை வெனிசுலா நிறுத்திவிட்டது.

கொலம்பியாவின் ராணுவ முகாம்களை அதிகரிக்கும் முடிவை கடுமையாக எதிர்க்கும் சாவேஸ் அதனுடனான ஒப்பந்தங்கள் அனைத்தையும் மறுபரிசீலனை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே சென்ற ஆண்டு 700 கோடி டாலர் வர்த்தகம் நடைபெற்றது. சென்ற ஆண்டில் அர்ஜென்டினாவுடன் 140 கோடி டாலர்களுக்கே வெனிசுலா வியாபாரம் நடத்தியுள்ளது.

சாவேஸ் ஏற்கெனவே பெட்ரோல் வர்த்தகத்தை நிறுத்திவிட்டார். கொலம் பியாவின் காபிக் கொட்டைகளை நிறுத்திவிட்டு, 1500 டன் கொட்டைகளை பிரே சிலிடம் வாங்குமாறு சாவெஸ் உத்தரவிட்டுள்ளார். கொலம்பியாவிடமிருந்து இறக்குமதியாகும் பொருட்களின் தேவையை ஈடுகட்ட வெனிசுலா மற்ற அண்டை நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் வெனிசுலாவில் அரசியல் நெருக்கடி ஏற்படக்கூடும்.

வெனிசுலாவின் வர்த்தக முறிவு கொலம்பியாவைப் பாதித்துள்ளது. வெனிசுலா ஒரு முக்கியமான சந்தை, ஆனாலும் நாங்கள் பல இடங்களுக்கு செல்ல வேண் டிய கட்டாயம் ஏற்பட்டுள் ளது என்று நிதியமைச்சர் ஆஸ்கர் ஜூலுவாகா கூறி னார்.

Exit mobile version