Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அமெரிக்க தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்!

06.11.20008.

ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் கிளப்பிய புழுதியில் மறைந்துவிட்டது போல் தோன்றி னாலும், மக்கள் மத்தியில் சுகாதாரத்துறை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க முதலாளித்துவ நெருக்கடியால் பல்வேறு துறைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுகாதாரத்துறை மட்டும் கொள்ளை லாபம் ஈட்டி வருகிறது.

மக்களின் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்பட் டுள்ள நிலையில் சுகாதாரத்துறை ஊழியர் களின் நிலைமையும் மோசமாகியுள்ளது. போதிய ஆட்களை வேலைக்கு சேர்க்காமல் இருப்பவர்களை வைத்து உழைப்பைச் சுரண்டி வரும் நிறுவனங்களின் செயல்பாட்டை எதிர்த்து ஊழியர்கள் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர்.

ஒப்பந்த முறையை எதிர்த்து பல்வேறு துறைகளில் தீவிரமான போராட்டங்கள் நடந்து வருவதால் சுகாதாரத்துறையில் அதைவிட கொடுமையான முடிவை எடுத்துள்ளனர். அத்தகைய ஒப்பந்த முறை கூட இல்லாமல் ஏராளமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அடுத்த நாள் வேலை இருக்குமா, இல்லையா என்ற சந்தேகத்தில் அவர்கள் அன்றாடம் வந்து செல்கின்றனர்.

தங்கள் சங்கம் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் தேவைகளுக்காகவும் போராடி வருகிறது என்று ஒன்றுபட்ட மருத்துவத்துறை ஊழியர்கள் சங்கம் கூறியுள்ளது. போதிய ஊழியர்கள் போன்ற கோரிக்கைகள் பொது மக்களுக்கும் உதவக்கூடிய கோரிக்கைதான் என்று அச்சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான ஓடெல் ஹன்டர் கூறுகிறார்.

Exit mobile version