இந்த தாக்குதலில் குறைந்தது தீவிரவாத சந்தேக நபர்கள் 12 பேர் கொல்லப்பட்டனர்.
ஆப்கானை ஒட்டிய பாகிஸ்தானின் பழங்குடியினர் பிரதேசமான வடக்கு வசிரிஸ்தானில் இருக்கும் பயிற்சி முகாம் என்று கூறப்படும் இடத்தின் மீது இந்த ஏவுகணை தாக்குதல் குறிவைத்து நடத்தப்பட்டது.
தாக்குதல் நடப்பதற்கு சற்று முன்னதாக தாக்கப்பட்ட இடத்திலிருந்து தங்கள் தலைவர் வேறு இடத்திற்கு சென்றதாகவும், அவர் தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும் பாகிஸ்தான் தாலிபன் அமைப்பின் சார்பில் பேசவல்லவர் தெரிவித்திருக்கிறார் .
BBC