Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அமெரிக்க ஜனாதிபதி புஷ் ஏற்றிவிட்டுச் செல்லும் கடன் தொகை ???

30.10.2008.

மன்மோகன் சிங்கின் மனதுக்கு உகந்தவரான அமெரிக்க ஜனாதிபதி புஷ் தனது பதவியை விட்டு சில நாட்களில் வெளியேறப்போகிறார்.இவர் அமெரிக்கா வின் எதிர்கால சந்ததியினர் மீது ஏற்றிவிட்டுச் செல்லும் கடன் தொகை எவ்வளவு தெரியுமா?

10.3 டிரில்லியன் டாலர்.புரியவில்லை என்கிறீர் களா?

ஒரு டிரில்லியன் என்றால் ஒரு லட்சம் கோடி

10.3 டிரில்லியன்—10.3 லட்சம் கோடி

ஒரு டாலரின் இன்றைய மதிப்பு—ரூ50

அப்படியானால் ரூபாய்க்கணக்கில் அதன் மதிப்பு 515லட்சம் கோடி.இதன் பிரம்மாண்டம் இன்னும் புரியவில்லையா? பிடல் காஸ்டிரோ அளித்துள்ள சித்திரம் அதனை தெளிவுபடுத்தி விடும்

ஒரு டாலர் நோட்டுக்களாக எடுத்துக் கொண்டு இதனை எண்ணினால் எண்ணி முடிக்க எவ்வளவு காலம் ஆகும் என்பதை காஸ்ட்ரோ கணக்குப் போட் டுக்காட்டியுள்ளார்.

ஒரு நிமிடத்துக்கு நூறு நோட்டு என்ற அளவில் ஒருவிநாடியைக் கூட வீணடிக்காமல் தினமும் எட்டு மணி நேரமும் ஒரு ஆண்டுக்கு முன்னூறு நாட்களும் இடைவிடாமல் ஒருவர் எண்ணிக் கொண்டிருந்தால் கடன் தொகையான 10.3 டிரில்லியன் டாலரை எண்ணிக்க முடிக்க எவ்வளவு காலம் பிடிக்கும் தெரியுமா,?

அதிகமில்லை .—7,15,000 வருடங்கள் மட்டுமே ஆகும் .

இது எப்படி இருக்கு?

– கே.எல்.

Exit mobile version