Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அமெரிக்க செல்வாக்கை பலவீனப்படுத்த புதிய அமைப்பை உருவாக்க வேண்டும்: ரால்காஸ்ட்ரோ

 
லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்தியத்தில் அமெரிக்க செல்வாக்கை பலவீனப்படுத்த அமெரிக்க நாடு இல்லாத புதிய அமைப்பை உருவாக்க வேண்டுமென்று மெக்சிகோ உச்சி மாநாட்டில் கியூபா ஜனாதிபதி ரால் காஸ்ட்ரோ அழைப்பு விடுத்தார்.

மெக்சிகோ நாட்டின் கடற்கரை நகரமான பிளேயா டெல் கார்மெனில் மெக்சிகோ – காரிகாம் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் கியூபா ஜனாதிபதி ரால்காஸ்ட்ரோ உரையாற்றினார். அமெரிக்கா மற்றும் பிரிட்டன் மீது ரியோ குழுமத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகள் கூறிய புகார்களுக்கு ரால் ஆதரவு தெரிவித்தார்.

ரியோ குழுமத்தில் 2008ல் ஆண்டில் கியூபா இணைக் கப்பட்டது. கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளை மாநாடு கண்டித்தது. ஸ்பானிஷ் மொழியில் மால்வினாஸ் என்று அழைக்கப்படும் பாக் லாந்து பிரச்சனையில் பிரிட்டிஷார் எண்ணெய் எடுப் பதை ரால் கடுமையாக எதிர்த்தர்.

மால்வினாஸ் தீவுகள் மீது அர்ஜென்டினாவுக்கு உரிமை உள்ளதென்று கியூபா கூறி வருகிறது. அதனுடைய இயற்கை வளத்தின் மீதும், அர்ஜென்டி னாவுக்கு உள்ள நியாயமான உரிமையை ஆதரிக்கிறோம் என்றும் அவர் அறிவித்தார். அமெரிக்கா மீது ஈகுவேடார் அரசு கூறி வரும் புகார்களையும் கியூபா ஆதரிக்கிறது என்றும் அவர் கூறினார்.

மெக்சிகோ, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் அடங்கிய ரியோ குழும நாடுகள் ‘அமெரிக்க நாடுகளின் அமைப்பு’ என்பதற்கு மாற் றாக புதிய லத்தீன் அமெரிக்க குழுமத்தை அமைப்ப தென்று முடிவு செய்துள்ளன.

Exit mobile version