Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அமெரிக்க ஆக்கிரமிப்புபோரால் அந்நாடேநிலைகுலைந்து போயுள்ளது:ஆப்கான் போருக்கு எதிர்ப்பு – அமெரிக்க அதிகாரி விலகல்!

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் சமாதானத்தின் தூதுவராக தன்னை பாரக் ஒபாமா முன்னிறுத்திக்கொண்டார். தற்போது அவர் சட்டப்பூர்வமாகவே (நோபல் அமைதி பரிசு மூலம்!) சமாதா
னப்புறாவாகி விட்டார். ஆனால் ஆப்கானிஸ்தானில் இன்னும் போர் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாகநீடித்துவரும்அந்தஆக்கிரமிப்புபோரால்அந்நாடேநிலைகுலைந்து போயுள்ளது.

ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் பணியில் இருக்கும் அமெரிக்க இராணுவ உயரதிகாரியே பதவி விலகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேத்யூ ஹோ என்ற அந்த அதிகாரி போருக்கு எதிரான மனம் படைத்தவரல்ல. அவரும் மற்ற ராணுவ அதிகாரிகள் போன்றவர்தான். இராக் நாட்டில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க கப்பற்படையின் கேப்டனாக செயல்பட்டு வந்த அவர் இந்த ஆண்டு துவக்கத்தில் ஆப்கானிஸ்தானுக்கு மாற்றப்பட்டார். இதுநாள் வரை அமைதியாக தனது பணியை கவனித்து வந்த அவர் திடீரென்று ராஜி
னாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

அவரது பிரிவின் உயரதிகாரிக்கு எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில் அவர் கூறியுள்ளது அமெரிக்க அரசிற்கு அதிர்ச்சியளித்துள்ளது. ‘‘ நான் ஆப்கானிஸ்தான் பிரச்சனையைப் பொறுத்தவரை அமெரிக்க அரசின் அணுகுமுறையில் நம்பிக்கை இழந்து விட்டேன்,’’ என்று துவங்கும் அக்கடிதம் “இந்த விஷயத்தில் எனக்கென்று சில சந்தேகங்களும், கருத்துகளும் உள்ளன . தற்போதைய அணுகுமுறை மட்டுமல்ல, அந்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்காக என்று அமெரிக்க அரசு வகுத்துள்ள அணுகுமுறைகளும், போர்த்தந்திரங்களும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளன…,’’ என்று நீள்கிறது.

ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதைக் காட்டிலும் இந்த ஆக்கிரமிப்பு அமைதியைக் குலைக்கவே செய்திருக்கிறது என்று அவர் குற்றஞ்சாட்டும் தொனியில் கூறியிருப்பது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்
தியுள்ளது.

ஹோவை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கான சிறப்பு தூதர் ரிச்சர்ட் ஹால்புரூக் ஈடுபட்டார். ஆனால் அதை ஹோ ஏற்க மறுத்ததால் கடைசி முயற்சியாக காபூல் தூதரகத்தில் ஒரு பதவி அளிப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதையும் ஹோ நிராகரித்து
விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version