அமெரிக்காவின் அணுஆயுத தடுப்பு கட்டமைப்பானது, ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ சமன்பாட்டை அழிக்க வல்லதாக இருக்கும் என்று புடின் அவர்கள் செய்தியா ளர்களிடம் தெரிவித்தார்.
அமெரிக்காவின் அத்தகைய கட்டமைப்பானது, புதிய தாக்குதல் ஆயுதங்களை வளர்த்தெடுக்க வேண்டிய நிர்பந்தத்தை ரஷ்யாவுக்கு உருவாக்குவதாகவும் அவர் கூறினார்.
ஐரோப்பாவை தளமாக கொண்டு செயற்படும் நிலத்தில் அமைக்கவிருந்த தனது ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பை கைவிடுவதாக அமெரிக்கா அறிவித்திருந்தாலும், கடலில் இருந்து செயற்படக் கூடிய இத்தகைய கட்டமைப்பை உருவாக்குவது குறித்து பரிசீலிக் கப்போவதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவர்கள் தெரிவித்திருக்கிறார்.
BBC.