Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அமெரிக்கா சென்றுள்ள மோடிக்கு நீதிமன்றத்தில் பிடியாணை :குஜராத் இனக்கொலையின் எதிரொலி

modi_in_usஉலகில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்காக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத்தொடர சர்வதேசச் சட்டங்களில் இடமுண்டு. அமெரிக்க நீதிமன்றத்தில் மனித உரிமை அமைப்பு தாக்கல் செய்த மனு ஒன்றின் அடிப்படையிலேயே அமெரிக்கா சென்றுள்ள மோடிக்கு அந்த நாட்டின் நீதிமன்றம் பிடியாணை அனுப்பியுள்ளது.

குஜராத்தில் நடைபெற்ற முஸ்லீம்களுக்கு எதிரான இனப்படுகொலையை நரேந்திர மோடி தலைமை தாங்கினார் எனக் கருதப்படுகின்றது. ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கொலை செய்யப்பட்ட குஜராத் படுகொலைகளின் பின்னர் அமெரிக்கா மோடிக்கு விசா வழங்க மறுத்து வந்தது. பின்னர் அமெரிக்க மற்றும் இந்திய பல்தேசிய வியாபார நிறுவனங்களின் ஆதரவுடனேயே மோடி ஆட்சிக்கு வந்தார்.
2009 ம் ஆண்டு இனப்படுகொலை செய்து ஒருலட்சம் வரையிலான அப்பாவிகளைக் கொன்று குவித்த இனக்கொலையாளி ராஜபக்சவிற்கு எதிராக மில்லியன்கணக்கில் மக்களின் பணத்தை சுருட்டி வைத்திருக்கும் புலம்பெயர் அமைப்புக்கள் வழக்குத் தொடரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மனுவை விசாரித்த நியூயார்க் நீதிமன்றம் சம்மனை பெற்ற 21 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு பிரதமர் மோடிக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த கெடுவுக்குள் பதில் அளிக்காவிட்டால் ஒரு தரப்பாக தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மோடிக்கு எதிரான வழக்கில் 2002-ம் ஆண்டு வன்முறைகளின் போது இஸ்லாமியர்களுக்கு எதிராக இனபடுகொலை நடத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றமே கருத்து தெரிவித்துள்ளது. குற்றச்சாட்டுகள் நிருபிக்கபட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதுடன் அபராதமும் செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.

Exit mobile version