Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அமெரிக்கா இந்தியாவுடன் புதிய ராணுவ ஒப்பந்தம்.

அமெரிக்காவிடமிருந்து பெருமளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது. அமெரிக்கா வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இந்தியாவுக்கு வந்திருந்த போது, இதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப் பட்டது.

இந்தியாவுக்கு வழங்கும் அணுசக்தி தொடர்பான தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதை கண்காணிக்க அமெரிக்காவுக்கு அதிகாரம் அளிக்க இந்த ஒப்பந்தத்தில் வகை செய்யப் பட்டுள்ளது.

இத்தகைய ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டதின் மூலம் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்திற்கு மேலும் நெருக்கமாக இந்தியா வந்திருக்கிறது என்று அமெரிக்கா புளகாங்கிதம் அடைந்துள்ளது. என்ட் யூஸ் மானிட்டரிஸ் அக்ரி மென்ட் (இயுஎம்ஏ) என்ற இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது ஒரு மைல்கல்லாகும் என்றும் இந்தியாவுக்கு அளிக்கப்படும் எந்தவொரு பாதுகாப்புக் கருவியும் வேறு கரங்களுக்குச் செல்வதைத் தடுக்க இது உதவும் என்றும் அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் ராபர்ட் உட் கூறிக் கொண்டார். அமெ ரிக்காவின் பொருளாதார – ராணுவ நலன்களுக்கு இந்தியா முற்றிலும் அடிபணிவதாக இந்த ஒப்பந்தம் உள்ளது என்று பரவலாக விமர்சனம் எழுந்துள்ளது. இந்த விமர்சனம் சரியானது என்பதை நிரூபிப்பதாக உட்டின் கருத்து அமைந்துள்ளது. “நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். எங்களது அணு ஆயுதப் பரவல் தடை முயற்சிகளில் மிகவும் முக்கியமானதாகும் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான இந்த ஒப்பந்தம்.

இந்தியாவை அணு ஆயுதப் பரவல் தடையின் பிரதான நீரோட்டத்திற்குக் கொண்டு வர ஒப்பந்தம் உதவும் என்று நாங்கள் முற்றிலும் நம்புகிறோம்” என ராபர்ட் உட் நிருபர்களிடம் பேசுகையில் விளக்கினார்.

“இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் நலனைப் பாதுகாக்கக் கூடியதாகும். மொத்தத்தில் இது மிகவும் பயனுள்ளது. ஒப்பந்தத்தை உடனே அமல்படுத்தியாக வேண்டும். அதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.”

“ஒப்பந்தத்தில் “என்ட் யூசர்” என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது. இதன் அர்த்தம் இந்தியாவுக்கு அளிக்கப்படும் சாதனங்களை அமெரிக்காவுக்குத் தெரியாமல் மற்றவர் கரங்களுக்குச் செல்வதைத் தடுக்க வேண்டும் என்பதாகும்” என்று அவர் கூறினார்.

இதை உறுதிப்படுத்த இந்தியாவின் ராணுவத் தளங்களை சோதனையிடுவீர்களா என்று கேட்ட தற்கு, “இத்தகைய பிரச்ச னைகள் குறித்து இரு தரப்பும் சர்வதேச அணுசக்தி முகமையுடன் பேச்சு வார்த்தை நடத்துவர். ஒப்பந்த விஷயத்தில் நான் நிபுணர் அல்ல” என்றார்.

இதனிடையே வாஷிங்டனில் இந்திய தரைப் படைத் தளபதி தீபக்கபூர் அமெரிக்க ராணுவத் தலைமையுடன் ஆலோசனை நடத்தினார். புதன்கிழமையன்று அமெரிக்க கூட்டுப் படைத் தலைவர் மைக் முல்லர், தரைப்படைத் தலைவர் ஜார்ஜ் டபிள்யூ காஸி ஆகியோருடன் கபூர் பேச்சு வார்த்தை நடத்தினார்.

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் பகுதியில் இந்தியாவின் பங்கு குறித்து தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அதிகாரப் பூர்வமாக விளக்கம் அளிக் கப்பட்டுள்ளது.

ஆப்கன் யுத்தத்தில் இந்தியா இதுவரை நேரடியா கப் பங்கேற்கவில்லை. யுத்தத்திற்குப்பிந்தைய மறுநிர்மாணப் பணிகளில் இந்தியாவைப் பங்கேற்கச் செய்யலாம் என்ற யோசனையை அமெரிக்கா இப்போது முன்வைத்துள்ளது.

ஆனால், இந்தியா அமெரிக்காவின் கேந்திரப் பங்காளியாக மாறிவிட்ட சூழ்நிலையிலேயே ராணுவத் தளபதிகளிடையே பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன என்று அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

Exit mobile version