அமெரிக்காவுடனான நாசகர உடன்பாடு : நிறைவேற்ற விடமாட்டோம்

புதுடில்லி, ஜூலை 10-

இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக நாட்டின் நலனை பாதிக்கக் கூடிய அமெரிக்காவுடனான அணு சக்தி உடன்பாட்டை செயல்படுத்த விடமாட்டோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செய லாளர் பிரகாஷ் காரத் உறுதிபட கூறி னார்.

வியாழனன்று டில்லியில் செய்தி யாளர்களைச் சந்தித்த அவர் இடது சாரிக் கட்சிகளின் சார்பில் கூட்டாக வெளியிடப்பட்ட அறிக்கையினை வெளியிட்டார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

நாடாளுமன்றத்தில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பிறகுதான் அணுசக்தி உடன்பாடு தொடர்பான பாதுகாப்பு வாசகங்களை சர்வதேச அணுசக்தி முகமையின் ஆளு நர் குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பு வோம் என்று ஜூலை 8-ம்தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது அயல் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருந்தார். நாங்கள் பெரும் பான்மையை இழந்து விட்டால் அணு சக்தி முகமையை அணுகமாட்டோம் என்றும் அவர் கூறினார். இது தொடர் பாக ஜப்பானில் உள்ள பிரதமரிடமும் தாம் ஆலோசித்ததாக பிரணாப் முகர்ஜி கூறினார்.

அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றுக் கொள்வது என்று இடதுசாரிக் கட்சிகள் அறிவித்த சூழ லில், நாடாளுமன்றத்தில் பெரும் பான்மை பெறும் வரை சர்வதேச அணு சக்தி முகமையை அணுகமாட்டோம் என்பது நாட்டு மக்களுக்கு அரசு அளித்த உறுதிமொழியாகும்.

இத்தகைய அறிவிப்பை வெளி யிட்ட 24 மணி நேரத்தில் இந்திய அரசு தங்களை அணுகியுள்ளதாக சர்வதேச அணுசக்தி முகமை அறிவித்ததோடு, முகமையின் ஆளுநர்கள் குழு பரி சீலனைக்கு இந்திய அரசு அளித்த உறுதி மொழி வாசகங்களையும் வெளியிட் டுள்ளது.

இது மத்திய அரசு, நாட்டு மக்க ளுக்கு அளித்த உறுதிமொழியை அப் பட்டமாக மீறிய செயலாகும் என்பn தாடு, நாட்டிற்கு அளித்த தார்மீக உறுதி மொழிக்கு அரசு துரோகம் இழைத் திருப்பதும் ஆகும். அமெரிக்க ஜனாதி பதி புஷ்சை, பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்த பிறகு, நாட்டு மக்களுக்கு அரசு அளித்திருந்த உறுதிமொழியை தூக்கி யெறிய வேண்டிய அவசியம் என்ன வந்தது. மக்களுக்கும், நாட்டிற்கும் பிரதமர் மன்மோகன் சிங் பதிலளித்தாக வேண்டும்.

உறுதிமொழி வாசகங்களை இந்திய அரசுதான் ரகசியமாக வைத்துள்ளது. சர்வதேச அணுசக்தி முகமை அல்ல என்று இடதுசாரிக் கட்சிகள் ஜூலை 8-ம்தேதி உறுதிபட தெரிவித்தன. 24 மணி நேரத்தில் சர்வதேச அணுசக்தி முகமையின் செய்தித் தொடர்பாளர் இதைத் தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக இந்தியா அளித்த உறுதிமொழி ஒப்பந்தம் தற்போது உலகம் அறிந்த ரகசியமாகி விட்டது. உறுதிமொழி ஒப்பந்தத்தை இடதுசாரிக் கட்சிகள் பரிசீலித்த பிறகு தங்களது நிலையை தெளிவுபடுத்தும்.

அறிக்கையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் ஏ.பி.பர தன், பார்வர்டு பிளாக் பொதுச் செய லாளர் தேவபிரதா பிஸ்வாஸ் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் காரத், அமெரிக்கா வுடனான அணுசக்தி உடன்பாடு இந்திய நாட்டின் நலனுக்கு எதிரானது. என்றென்றைக்கும் நம்மை பாதிக் கக்கூடியது. இந்த உடன்பாட்டை எதிர்த்து நாடாளுமன்றத்திற்குள்ளே யும், வெளியேயும் தொடர்ச்சி யாக போராடுவோம். இந்த உடன் பாட்டின் அபாயகரமான அம்சங்களை நாட்டு மக்களிடம் விரிவாக பிரச்சாரம் செய் வோம் என்றார்.

இந்த உடன்பாடு நடைமுறைக்கு வராமல் இருக்க நாங்கள் கடுமையான போராட்டத்தை நடத்துவோம். அரசு இந்த உடன்பாட்டை நிறைவேற்ற முடி யாத நிலையை ஏற்படுத்துவோம் என்று கூறிய பிரகாஷ் காரத், சர்வதேச அணு சக்தி முகமையிடம் அளிக்கப்பட்ட பாதுகாப்பு உடன்பாடு வரைவு அறிக்கை மிகவும் ரகசியமானது என்று ஆட்சியாளர்கள் இங்கு கூறிக்கொண் டிருக்கும் போதே அமெரிக்க இணைய தளம் அதை முழுமையாக வெளியிட்டு விட்டது. இதுதான் நாட்டு மக்களுக்கு ஆட்சியாளர்கள் தரும் மரியாதை என்று விமர்சித்தார்.

அணுசக்தி உடன்பாடு தொடர்பாக அரசு அளித்திட்ட குறிப்பு, அதற்கு இடதுசாரிக் கட்சிகள் அளித்த பதில் ஒரு நூலாக வெளியிடப்பட்டது.