அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் தொடர்பான மாநாட்டில் அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்கும் ஈரான் அதிபர் அகமதி நிஜாதிற்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அமெரிக்கா தொடர்ந்து ஈரானை அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வலியுருத்தி வருகிறது. ஆனால் அஜமதி நிஜாத்தோ அமெரிக்காவின் ஆயுத வியாபராத்தையும் அணுக் கொள்கையில் அதன் ஏகோ போக மேலாதிக்கத்தையும் தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில்தான் மாநாட்டில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரிடமே இஸ்ரேல் தொடர்பான அமெரிக்காவின் கொள்கை பற்றி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார் ஈரான் அதிபர் ”
முதன் முதலில் அணுகுண்டை உருவாக்கி அதை பயன்படுத்தியது அமெரிக்காதான். இன்றும் கூட அது பெருமளவில் அணு ஆயுதங்களை குவித்து வைத்துள்ளது. அணு ஆயுதப் பரவலை உருவாக்கியதே அமெரிக்காதான். ஆனால் மற்ற நாடுகள் அணு ஆயுதங்களை வைத்துக் கொள்ளக் கூடாது என்று மிரட்டி வருகிறது.ஈரான் அணு ஆயுதங்களை வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறி வரும் அமெரிக்கா, இஸ்ரேல் மீது கவனம் செலுத்தாதது ஏன். இஸ்ரேல் அணு ஆயுதங்களைக் குவித்து வருவதை கண்டிக்காதது ஏன்.பிற நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதங்களை வைத்து மிரட்டுவதோடு, பயன்படுத்தவும் தயங்காத அமெரிக்கா, தொடர்ந்து ஈரானை மட்டும் சாடி வருவது வருத்தத்திற்குரியது என்றார். பின்னர் பேசிய ஹில்லாரி கிளிண்டன், அகமதிநிஜாத்தின் பேச்சு எதிர்பார்த்த ஒன்றுதான், வியப்பளிப்பதாக இல்லை என்றார்.