Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அமெரிக்காவில் 23 வீதமான குழந்தைகள் வறுமையின் பிடியில்…

childpuvertyஉலகின் யுத்தப்பிரபு அமெரிக்க அரசு தனது உள்நாட்டிலேயே 23 வீதமான குழந்தைகளை வறுமைக்கோட்டின் கீழே தள்ளியுள்ளது. என்ற நிறுவனத்தின் ஆய்வறிக்கை ஒன்று இத்தகவலை வெளியிட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளியேறிவிட்டதாகக் கூறும் அமரிக்க அரசு தனது சொந்த நாட்டிலும் வறுமையின் கோரப்பிடிக்குள் மக்களைச் சிக்கைவத்துள்ளது. குப்பைத்க்தொட்டிகளைக் குடையும் ஒரு சமூகம் தோன்றியுள்ளதே தனது இதயத்தை நெருடுவதாக அமெரிக்க சோசலிசக் கட்சியைச் சேர்ந்த தாமி கிளைரோன் தெரிவித்துள்ளார்.

புதிய உலக ஒழுங்கமைப்பை தோற்றுவிக்க வேண்டும் என ஒபாம உட்பட ஏகாதிபத்திய நாடுகளின் தலைவர்கள் கூறிவந்தனர். புதிய உலக ஒழுங்கமைப்பு என்பது தமது நாடுகளில் ஒரு பகுதி மக்களை மேலும் வறுமைக்கும் அவலத்திற்கும் பழக்கப்படுத்தி அவர்கள் மீது ஒடுக்குமுறையைப் பிரயோகிப்பதிலிருந்து ஆரம்பமாகிறது.

ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் வாழ்க்கைத்தரம் வறிய நாடுகளுக்கு ஒப்பானதாக மாற்றமடைகிறது என பல ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

விரவிட்டெண்ணக்கூடிய பணம்படைத்தவர்களின் வருமானம் பல மடங்காக அதிகரிக்க மக்களின் வாழ்க்கைத்தரம் குறைவடைந்துசெல்கிறது.

Exit mobile version