இந்த நிலையில் மத்திரி அரச தரப்பிலிருந்து பசிலைக் கைது செய்வதற்கான முனைப்புக்கள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.
இலங்கையிலிருந்து விமான நிலையத்தின் ஊடக பிரபுக்கள் செல்லும் வழியாகவே பசில் சென்றார். இவ்வழியாகச் செல்வதற்கு நாடாளுமன்ற அனுமதி அல்லது வெளிவிவகார அமைச்சின் அனுமதி தேவை.
இவை எதுவுமின்றி பசில் வெளியேறியமை சட்டவிரோதமானது என்பதால் அவரைக் கைது செய்ய பிடியாணை பிறப்பிபதற்கு இலங்கை நீதிமன்றத்திற்கு உரிமை உண்டு.
வன்னிப் போரில் இனப்படுகொலையில் நேரடியாக ஈடுபட்ட மகிந்த, பசில், கோத்தாபய போன்ற சமூகத்திற்கு ஆபத்தான குற்றவாளிகளைப் பொதுவெளியில் உலாவ அனுமதிப்பதே தவறானது.
இறுதியில் ஏகாதிபத்திய அரசுகள் தமது சொந்த நலன்களுக்காக நிகழ்த்தும் அதிக்கார மாற்றங்களில் மட்டுமே மக்கள் தங்கியிருக்கும் அரசியல் வழி நடத்தல் அற்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.