அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வேட்பாளராக குடியரசு கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட . மிட் ரோம்னி .
இவர் சி.பி.எஸ். நியூஸ் என்ற ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், சிரியா நாடு ரசாயன ஆயுதங்களை பரப்புவதை தடுப்பதற்கு தேவைப்பட்டால் அமெரிக்க படைகளை அனுப்புவேன் என்று கூறினார்.
தீவிரவாதத்தின் கைகளில் இத்தகைய ஆயுதங்கள் கிடைத்து அழிவினை ஏற்படுத்துவதற்கு முன்பாக நாம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க தயாராக இருக்க வேண்டும் என கருதுகிறேன்.
அதற்காக படைகளை தயார் செய்வது மற்றும் நம் நட்பு நாடுகள் அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பது ஆகியவற்றை உள்ளடக்கியதாக நம் நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும், துருக்கி மற்றும் சவூதி அரேபியா ஆகியவை அந்த பகுதிகளில் அமைந்துள்ளது .