இலங்கையின் முன்னைநாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ராஜபக்ச குடும்பத்தின் இனப்படுகொலை கொள்ளையர்களில் ஒருவருமான பசில் ராஜபக்ச லோஸ் எஞ்சல்ஸ் விமானநிலையத்திலிருந்துஅ அமைதியாகத் தனது இருப்பிடம் நோக்கிச் செல்கிறார். தனது பங்காளிச் சகோதரர்களை இலங்கையிலேயே விட்டுவிட்டு மனைவியுடன் அமெரிக்கா சென்ற பசில் இனிமேல் இலங்கை திரும்ப வாய்ப்புக்கள் அருகிவருகின்றன.
வன்னி இனப்படுகொலையின் இறுதி நாட்களில் போர்க்குற்றங்களில் நேரடியாகத் தொடர்புடைய பசில் ரஜபக்ச போரின் பின்னர் மக்களின் வாழ்வாதாரங்களைச் சூறையாடி தனது பணப்பையை நிரப்பிக்கொண்டார்.
பத்து வருடங்களாக இலங்கையில் நடைபெற்ற கொலை, கொள்ளை, மிரட்டல், சூறையாடல் என்ற அனைத்திலும் மகிந்த கோத்தாபய ஆகியோருடன் இணைந்து செயற்பட்டவர்.
அமெரிக்காவில் வசித்துவந்த பசில் 2005 ஆம் ஆண்டு அவரது அண்ணன் மகிந்தவின் தேர்தல் பிரச்சராத்தில் பங்குகொள்ளத் தற்காலிகமாக இலங்கைக்கு வந்தார். தேர்தலில் மகிந்த வெற்றியடைந்ததும் அங்கேயே தங்கிவிட்ட பசில், பின்னதாக நாட்டின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொண்டு தனது பொருளாதாரத்தை வளர்த்துக்கொண்டார்.
பசில் கொள்ளையடித்த பணத்தின் தொகையும் கொலைகளின் எண்ணிக்கையும் புள்ளிவிபரங்களோடு அறியப்படாதவை என்றாலும், பசில் ராஜபக்சவின் லோச் எஞ்சல்ஸ் வீட்டின் பெறுமதி மில்லியன்கள் என்று அவரது ஆட்சிக்காலத்தின் போதே தகவல்கள் வெளியாகின.
அமெரிக்காவின் ஆதரவில் போர்க்குற்ற விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது அமெரிக்காவின் இருதயப் பகுதியில் பசில் நிரந்தரமாக வாழ துணிந்திருக்கிறார் என்பது போர்க்குற்ற விசாரணை கிடப்பில் போடப்படுகிறது என்பதன் அறிகுறி.