Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அமெரிக்காவின் நிர்பந்தத்தால் ஜமாத்-உத்-தவா அமைப்பிற்கு பாகிஸ்தான் அரசு தடை?:அமெரிக்கா மறுப்பு !

14.12.2008.

அமெரிக்காவின் நிர்பந்தத்தால்தான் ஜமாத்-உத்-தவா அமைப்பிற்கு பாகிஸ்தான் அரசு தடைவிதித்தது என்ற குற்றச்சாட்டை அமெரிக்கா மறுத்துள்ளது. ஜமாத்-உத்-தவா அமைப்பின் மீதான தடை பாகிஸ்தானின் சொந்த முடிவு என்றும் அமெரிக்கா விளக்கியுள்ளது.

பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்ட லஷ்கர்-ஈ-தயீபாவின் துணை அமைப்பான ஜமாத்-உத்-தவா அமைப்பிற்கு ஐ.நா. பாதுகாப்பு சபை தடைவிதித்ததைத் தொடர்ந்து அந்த அமைப்பிற்கு பாகிஸ்தானிலும் தடைவிதிக்கப்பட்டது.

இதுதொடர்பாக அமெரிக்க செய்தித் தொடர்பாளர் சீன் மெக்கார்மாக் செய்தியாளர்களிடம் பேசிய போது, ஜமாத்-உத்-தவா அமைப்பை தடை செய்யாவிட்டால் பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக கருதப்படும் என அமெரிக்கா எச்சரித்ததாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்த கருத்து குறித்து விளக்கம் கேட்கப்பட்டது.

இதற்கு மறுப்பு தெரிவித்த மெக்கார்மாக், ஜமாத் அமைப்பிற்கு தடைவிதித்தது பாகிஸ்தான் அரசு விரும்பி மேற்கொண்ட நடவடிக்கை. மேலும், கடந்த பல ஆண்டுகளாக பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கும் இது பலனளிக்கும் என்பதை அமெரிக்கா கடந்த காலங்களில் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளது என்பதையும் அவர் நினைவுபடுத்தினார்.

Exit mobile version