Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அமெரிக்காவின் தொடரும் அரச பயங்கரவாதம் 1997 இல் திட்டமிடப்பட்டது-ஆதாரங்கள் இணைப்பு

us_imperialismஒரு புதிய அமெரிக்க நூற்றாண்டிற்கான திட்டம் The Project for a New American Century (PNAC) என்ற வரைவின் அடிப்படையிலேயே இன்று அமெரிக்கா தலைமையில் உலகம் அழிக்கப்படுகிறது. 1997 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இத்திட்டத்தில் அமெரிக்காவின் மிகப்பெரும் முதலாளித்துவ சிந்தனையாளர்கள் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க உதவி ஜனாதிபதியாகவிருந்த டான் குவயெல் இன் தலைமை நிர்வாகியான வில்லியம் கிரிஸ்ரோல் இன் தலைமையின் கீழ் இத்திட்டம் 1997 ஆம் ஆண்டில் தொடக்கிவைக்கப்பட்டது. உலகத்தை அமெரிக்காவின் நலன்களுக்கும் கோட்பாடுகளுக்கும் ஏற்ப மாற்றியமைப்பதே இவர்களின் திட்டத்தின் அடிப்படை நோக்கமாகவிருந்தது.

உலகின் செல்வாக்குமிக்க அதி உயர் பணக்காரர்கள் வாழ்வதற்கு உகந்த பிரதேசமாக அமெரிக்காவை மாற்றுவதும், ஏனைய நாடுகளைப் போர்ப்பிரதேசங்களாகவும் அழிவிற்குரிய பிரதேசங்களாக மாற்றுவதும் இத்திட்டத்திம் மற்றோரு நோக்கம்.

 முன்னை நாள் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ரொனால்ட் ரம்ஸ்பெல்ட், உலக வங்கியின் தலைவர்கவிருந்த போல் வொல்போவிட்ஸ், உதவிப் பாதுகாப்புச் செயலாளர் ரிச்சார்ட் பேர்ல் போன்றோர் உட்பட பலர் இந்தத் திட்டத்தை உருவாக்கும் குழுவில் அங்கம் வகித்தனர். ‘அமெரிக்கப் பாதுகாப்பை மீளமைத்தல் – புதிய நூற்றாண்டிற்கான தந்திரோபாயம், படைகள், வளங்கள் என்ற அறிக்கையை இக் குழு வெளியிட்டது(இணைப்பு).

இந்த அறிக்கையின் அடிப்படையில் அமெரிக்காவின் நலன்களைப் பாதுகாக்க வேண்டுமானால் உலகம் முழுவதும் அமெரிக்க இராணுவம் பிரசன்னமாகியிருக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது.

லிபியா, ஈராக் போன்ற நாடுகள் தாக்கப்படுவதற்கு முன்பாகவே லிபியா, ஈரான், ஈராக், சிரியா, வட கொரியா ஆகியவை தாக்கப்பட வேண்டிய அமெரிக்காவின் எதிரிகளாகக் கணிப்பிடப்பட்டுள்ளன.

இன்று குர்திஸ் போராளிகள் அழிக்கப்படுவதையும், தனது நட்பு நாடுகள் ஊடாக ஐ,எஸ்.ஐ.எஸ் என்ற அமைப்பை உருவாக்கி அதனை அழிக்கப் போவதாக அமெரிக்கா நாடகமாடுவதும் முன்னமே திட்டமிடப்பட்டவை என்பது தெளிவாகின்றது.

2000ஆம் ஆண்டிலிருந்து இந்த அறிக்கையில் மேலும் சில பரிந்துரைகள் சேர்த்துக்கொள்ளப் பட்டிருக்கலாம் எனக் கருத இடமுண்டு. ஹில்லாரி கிளிங்டன் தலமையிலான குழு ஆசிய மையம் என்ற திட்டத்தின் ஊடாக ஆசிய நாடுகளை இராணுவ மயப்படுத்த வேண்டும் என்ற முடிவிற்கு வந்தது. ஆசியாவை அமெரிக்கா இராணுவ மயப்படுத்துவதற்கு இலங்கை மையமாகப் பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Click to access RebuildingAmericasDefenses.pdf

http://www.historycommons.org/context.jsp?item=a060397pnacprinciples&scale=1#a060397pnacprinciples

Exit mobile version