ஆப்கானிஸ்தானை ஒட்டிய தனது எல்லைப் பகுதியில் தலிபான்களுக்கெதிரான நடவடிக்கைக்கு அமெரிக்கா கூடுதலான ஆயுதங்களை வழங்குமென பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான தூதுவர் ரிச்சர்ட் ஹோல்புரூக் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் வந்துள்ள ஹோல்புரூக், அந்நாட்டின் அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்களுடன் மூன்று நாட்களுக்குப் பேச்சுவார்த்தைகள் நடத்துகிறார்.
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஒரு முக்கிய நிலப்பரப்பை தலிபான்களிடம் இருந்து பாகிஸ்தான் படையினர் மீட்டெடுத்தது ஒரு பெரிய வெற்றி என்று குறிப்பிட்டு பாகிஸ்தான் அரசாங்கத்தை அவர் பாராட்டியுள்ளார்.
ஸ்வாட் பள்ளத்தாக்கிற்கு மேற்காக அமைந்துள்ள தலிபான் கட்டுப்பாட்டிலுள்ள பழங்குடியினப் பகுதிகளில் பாகிஸ்தான் படைகள் அண்மையில் தொடுத்துள்ள தரைவழித் தாக்குதலைப் பயன்படுத்திக்கொண்டு பாகிஸ்தான் அரசாங்கம் முன்னேற்றம் காணவேண்டும் என்ற தகவலுக்காக அமெரிக்கா ஏக்கத்துடன் காத்திருக்கிறது என செய்தியாளர்கள் கூறுகின்றனர்.