Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அமெரிக்கப்படைகள் நடத்தி வரும் தாக்குதலில் மடியும் அப்பாவி மக்கள்.

தாலிபான்களிடமிருந்து மக்களைக் காப்பாற்றுவ தாகக் கூறிக் கொண்டு அமெரிக்கப்படைகள் நடத்தி வரும் தாக்குதலில் மடியும் அப்பாவி மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஞாயிறன்று வழி தவறிய மூன்று அமெரிக்க ஏவுகணைகள் தாக்கிய மூன்று வெவ்வேறு சம்பவங்களில் ஆறு குழந்தைகள் உள் ளிட்டு 12 பேர் மாண்டனர். திங்களன்று நடந்த தாக் குதலில் மேலும் மூவர் மாண்டனர். தாக்குதலுக்குள்ளான வீட்டில் மூன்று தாலிபான்கள் இருந் தனர் என்று ஆப்கன் அதிகாரி கூறினார். இதனால் நேட்டோ படைகள் ஏவு கணைகள் வீசுவதை நிறுத்திவிட்டன.

தாக்குதலின் நான்காவது நாளில் தாலிபான்களின் எதிர்த்தாக்குதல் வலுவ டைந்துள்ளது. கூட்டுப் படைகளின் முன்னேற்றம் ஆமை வேகத்தில் நகர்கிறது. ஆனால் அமெரிக்கா மற் றும் ஆப்கன் செய்தித் தொடர்பாளர்கள், தாலி பான்கள் முறியடிக்கப்பட்டு வருவதாகக் கூறி வருகிறார் கள். பகலில் மறைந்திருந்து இரவில் நேட்டோ படைக ளின் பின்புறத்தில் தாலி பான்கள் தாக்குகிறார்கள்.

மர்ஜாவில் தாலிபான் கள் அணிதிரண்டுள்ளனர். சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து அமெரிக்கா மற்றும் ஆப்கன் படைகளைத் தாக்கி வருகின்றனர். கண்ணி வெடிகளை அகற்றும் நேட்டோ படைகள் மீது துப்பாக்கிச்சூடும் நடத்து கின்றனர். ஒரு அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் படை வீரர்கள் கொல்லப்பட்ட தாக கூட்டுப்படைகள் கூறின. இதுவரை 27 தாலி பான்கள் கொல்லப்பட்டதாக ஆப் கன் அதிகாரி கூறினார்.

தளபதி கைது

கராச்சியில் தாலிபான் உயர் தளபதி ஒருவரை அமெரிக்க- பாகிஸ்தான் உளவுப்படைகள் கைது செய்துள்ளதாக நியூயார்க் டைம்ஸ் ஆன்லைன் பதிப்பு செய்தி வெளியிட்டுள்ளது. தாலிபான் நிறுவனர் முகமது உமருக்கு அடுத்த தலைவர் என்று கூறப்படும் முல்லா அப்துல் கனி பாரடர் சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டு, பாகிஸ்தான் சிறையில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் அது கூறியது.

Exit mobile version