Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அமெரிக்கனே சரணம் : ஒட்டுக்குழு பசுமைத் தாயகம்

us-imperialism

உலகின், ஒவ்வொரு தனி மனிதனது, முற்றத்தில் குடியிருக்கும் அளவிற்கு, அமெரிக்காவின் பயங்கரவாதம் உச்சமடைந்துள்ளது. அமெரிக்காவும், நேச அணிகளும் தலையிட்ட அனைத்து நாடுகளிலும், இரத்தம் ஆறாக ஓடுகிறது. அதே அமெரிக்க ஏகாதிபத்தியத்தை, கையைப்பிடித்து கூட்டிவந்த, ஏகாதிபத்திய ஒட்டுக்குழுக்கள், எந்தக் கூச்சமுமின்றி, நெஞ்சை நிமிர்த்தி, அமெரிக்காவை நியாயப்படுதுகின்றனர். “ஐ.நாவில் போர்க்குற்ற விசாரணை நடத்துகிறோம்” என்று கூறி, கடந்த ஆறு வருடங்களில், சுய நிர்ணைய உரிமைக் கோரிக்கைக்கான நியாயத்தை, முழுவதுமாக அழித்த தன்னார்வ நிறுவனங்களில்(NGO), பசுமைத் தாயகமும் ஒன்றாகும்.

ஏகாதிபத்திய நிதியில், இயங்கும், இந்நிறுவனம், தமிழ் நாட்டில் குடியிருந்தவாறே, புலம்பெயர் அமைப்புக்களை கட்டுப்படுத்தியது. ஐ.நாவிற்குள், நுளைய அனுமதி பெற்றுத் தருகிறோம், என்று கூறிய பசுமைத் தாயகம், கடந்த ஆறு வருடங்களாக, மக்களை ஏமாற்றி, ஈழத் தமிழர்களின் இனப்படுகொலைக்கு ஆதரவான, மக்கள் எழுச்சி தோன்றாமல் பார்த்துக்கொண்டது.

வன்னியர் சாதி வெறியைத் தூண்டி, ஒடுக்கப்பட்டவர்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்துவிடும், பாட்டாளி மக்கள் கட்சியின், துணை அமைப்புப் போன்று செயற்படும், பசுமைத்தாயகம் என்கிற தொண்டு நிறுவனம், பேர்கோப் பவுண்டேஷன் berghof foundation போன்ற அமைப்புக்கள் ஈழப் போராட்டத்தில் நேரடியாகவே தலையிட்டன.

போர்க்குற்ற விசாரணை தேவை என்றும், ஆனால் அது அமெரிக்காவின் தயவில் நடத்தப்படுவது, ஆட்சிமாற்றத்திற்கும், ஆக்கிரமிப்பிற்குமான நாடகம், என்று கூறியவர்கள் எல்லோரையும், துரோகிகள் ஆக்கியதில், பசுமைத்தாயகம் என்கிற தொண்டு நிறுவனத்தின் செயற்பாடுகளும், பிரதானமானவையாகும். ஐ.நா மனித உரிமை பேரவைக்குள், நுளைகின்ற ஒவ்வொரு ஈழத் தமிழனும், பசுமைத்தாயகம் என்கிற தொண்டு நிறுவனத்தின் அனுமதியுடனும், வேறு தொண்டு நிறுவனங்களின் அனுமதியுடனுடனேயே செல்லவேண்டியிருந்தது. ஏகாதிபத்திய நாடுகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை, பல்வேறு வழிகளில், தமது உளவு அமைப்புக்களாகவே கையாள்கின்றன; பயன்படுத்துகின்றன‌. பசுமைத்தாயகம் என்கிற அமெரிக்க நிதியில் இயங்குகின்ற தொண்டு நிறுவனத்தின் வலைப்பின்னலுக்குள்ளும் பல்வேறு புலம்பெயர் தமிழர்கள் அகப்பட்டனர்.

“இலங்கை அரசு உள்ளக விசாரணை செய்தாலே போதும்” என்று அமெரிக்கா கூறும் போது, பசுமைத்தாயகம் என்கிற தொண்டு நிறுவனம், அமெரிக்காவை ஆதரித்துப் பிரசாரம் செய்ய ஆரம்பித்துள்ளது. இலங்கையில் உள்ளக விசாரணை நடந்தாலும், ஓரளவு சர்வதேசத் தலையீடு இருக்கும் என்று, அமெரிக்கா கூறுவதை நம்பிக்கொண்டு அமெரிக்காவின் கால்களின் விழுந்து வணங்கியுள்ளது பசுமைத்தாயகம் என்கிற தொண்டு நிறுவனம்.

சீனா, கியூபா போன்ற நாடுகள் அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்த்தமையால், அமெரிக்காவே நண்பன் என்று கூறும், பசுமைத் தாயகம் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம், கோமாளித்தனமாக தமிழர்களை அமெரிக்காவினை, நம்பக் கோருகின்றது.இவ்வாறான உளவாளிகளும், ஏகாதிபத்திய ஒட்டுக்குழுக்களும், சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்திலிருந்து, முழுதாக அகற்றப்பட வேண்டும். எதிர்கால சந்ததியினர், இந்த உளவாளிகளின் கோரக்கரங்களில், ஒப்படைக்கப்படுவதைத் தடுக்கத் தவறினால், இன்னும் ஆயிரம் முள்ளிவாய்க்கால்கள் சத்தமின்றி நடத்தி முடிக்கப்படும்.

பசுமைத்தாயகம் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் அமெரிக்க ஆதரவு அறிக்கை:

On Sri Lanka at HRC30 – ARUL Chennai

Exit mobile version