சகோதர நாடுகளின் தூதர்களுக்கான சந்திப்பின்போது சவுதி மன்னர் அப்துல்லா இதுகுறித்து கூறியதாவது, நாம் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தை புறக்கணித்தால், அவர்கள் அடுத்த மாதம் ஐரோப்பாவிற்கு குறி வைப்பார்கள். மத்திய கிழக்கு நாடுகளின் வளங்களை அமெரிக்க பல்தேசிய நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்கு வசதி செய்யும் சர்வாதிகாரி அப்துல்லா ஐ.எஸ்.ஐ.எஸ் உருவாக்கி அமெரிக்காவின் ஆக்கிரமிப்பிற்கு வழிவகுத்தவர்களில் ஒருவர்.
தனது சொந்த நாட்டின் மக்களைக் குற்றுயிராக்கிக் கொலைக்களத்திற்கு அனுப்பி பல்தேசிய கோப்ரட் வியாபர நிறுவனங்களின் நலன்களுக்காக மத்திய கிழக்கை ஆக்கிரமிக விரும்பும் அமெரிக்க பிரித்தானிய அரசுகளின் உற்பத்தியே ஐ.எஸ்.ஐ.எஸ்.
அமெரிக்க அரசின் தேசிய பாதுகாப்பு முகவர் நிலையத்தின் ஒப்பந்தத் தொழிலாளரான எட்வார்ட் ஸ்னோடென் அமெரிக்கா, பிரித்தானியா, மொசாட் ஆகியன இணைந்தே ஐ,எஸ்.ஐ.எஸ் ஐ உருவாக்கியதாக சாட்சியமளித்திருந்தார்.
“the hornet’s nest என்று அழைக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் உலகம் முழுவதிலுமுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகளை ஒரே இடத்தில் இணைத்து மத்திய கிழக்கை இரத்தம் தோய்ந்த பிதேசமாக மாற்றுவதற்காகவே ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு உருவாக்கப்பட்டதாக ஸ்னோடென் தகுந்த ஆதரங்களுடன் வெளிப்படுத்தியுள்ளார்.
இவற்றைத் திட்டமிட்டு மறைக்கும் பல்தேசிய வியாபார ஊடகங்கள் அமெரிக்காவையும் மேற்கு ஏகாதிபத்திய நாடுகளையும் ஐ.எஸ்.ஐ.எஸ் இற்கு எதிராகப் போராடும் மீட்பர்களாகச் சித்தரிக்கின்றன.
இலங்கையில் நடைபெற்ற முப்பது வருட ஆயுதப் போராட்டத்தில் ஆரம்பத்தில்ருந்தே அமெரிக்க மற்றும் பிரித்தானிய உளவு நிறுவனனங்களின் தலையீடுகளும் பின்னணியும் காணப்பட்டன. தேவையான நேரங்களில் போராட்ட அமைப்புக்களைப் பயிற்றுவித்து தேவையற்ற நேரங்களில் அழித்துவிடும் ஏகாதிபத்தியங்களின் திட்டங்களில் ஆயிரமாயிரமாய் மக்கள் நசிந்து செத்துப்போகிறார்கள்.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை மூன்று நாடுகளின் உளவு நிறுவனங்கள் உருவாக்கியமைக்கான ஆதாரங்கள் ஸ்நோடனின் ஆவணங்களிலிருந்து வெளியானது. ஈழப் போராட்டத்தில் உளவு நிறுவனங்களின் தலையீடு குறித்த நீண்ட ஆய்வுகள் மக்கள் முன் வெளிப்படுத்தப்பட வேண்டும்.
உலகத்தில் மனித உரிமைகளுக்கு எதிரான அருவருக்கத்தக்க பேரரசை நடத்தும் அமெரிக்க அடியாளான சௌதி அரேபிய மன்னர் ஐ.எஸ்.ஐ.எஸ் இற்கு எதிராக நடவடிக்கை தேவை என்பது அமெரிக்க ஆக்கிரமிப்பை விரைவுபடுத்துவதற்கான அழைப்பாகும்.
சௌதி அரேபிய மன்னர் மேலும் கூறுகையில், உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், ஏற்க முடியாதபின்விளைவுகளை சந்திக்க நேரலாம்.மேலும தலையை வெட்டி படுகொலை செய்யும் அவர்களது கொடூர குணம், மிகுந்த கண்டிப்பிற்குரியது.
இது புதியதோர் செய்தி இல்லை, அவர்கள் எல்லாவற்றையும் செய்துவிட்டனர். இனி செய்வதற்கு ஏதும் இல்லை. இதனை அனைத்து தலைவர்களும் ஏற்று, தீவிரவாததிற்கு எதிரான வேகமான உரிய நடவடிக்கைகளை தகுந்த சமயத்தில் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்