அமெரிக்காவின் இருதயப்பகுதியில் தலைமையகத்தைக் கொண்டுள்ள பொது உறவுகள் முகவர் நிறுவனம்( Public relations -PR Agency) ஒன்றை ராஜபக்ச அரசு பெரும் தொகைப் பணத்தை வழங்கி வாடகைக்கு அமர்த்தியுள்ளது. பொது உறவுகள் முகவர்கள் மில்லியன் கணக்கில் பணத்தை வாங்கிக்கொண்டு திருட்டு ஒப்பந்தங்களிலிருந்து அரசுகளிடையான உறவுகளை மேம்படுத்தும் வேலை உட்பட இரும்பைப் பொன்னாக்கும் கண்கட்டி அரசியல் வித்தைகள் வரை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்பவர்கள். அரசியல் கட்சிகளின் பிரச்சார நடவடிக்கைகளைக் கூட இவர்கள் பொறுப்பெடுத்துக் கொள்வார்கள்.
2014 ஆம் ஆண்டு பிரதமராகும் நோக்கத்துடன் 2007 ஆம் ஆடிலிருந்து மாதாந்தம் 25ஆயிரம் டொலர்கள் பணத்தை வழங்கி ஆப்கோ என்ற அமெரிக்க நிறுவனத்தை பாரதீய ஜனதா வாடகைக்கு அமர்த்திக்கொண்டது. இப் பணத்தை ஆப்கோவிற்கு வழங்கியது பல்தேசியப் பெரு நிறுவனங்களே.
வன்னி இனப்படுகொலை முடிவடைந்த காலத்திலிருந்தே மேற்கு நாடுகளில் பல்வேறு பி.ஆர் நிறுவனங்களை ராஜபக்ச அரசு வேலைக்கு அமர்த்திகொண்டது. இந்த Liberty International Group LLC வருடம் என்ற அமெரிக்க பீ.ஆர் நிறுவனத்தை இலங்கை அரசு அமர்த்திக்கொண்டுள்ளது. அண்ணளவாக ஒன்றைரை மில்லியன் டொலர்கள் அளவிலான மக்கள் பணத்தை வழங்கி இந்த நிறுவனத்தை ராஜபக்ச அரசு வாடகைக்கு அமர்த்திக்கொண்டுள்ளது.
முகவர் நிறுவனத்தை வாடகைக்கு அமர்த்திக்கொண்டதன் அடிப்படை நோக்கங்கள்,
1. அமெரிக்காவிலிருந்து இலங்கை வியாபாரங்களில் அதிகமான நேரடி முதலீட்டைப் பெற்றுக்கொள்ளல்
2. இலங்கையின் சாதனைகள் தொடர்பாகவும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாகவும் அமெரிக்க அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தல்.
3. அமெரிக்க அரசியல் சூழல் இலங்கை அரசின் நோக்கங்களுக்கு இசைவாக்கம் அடைந்தாக மாற்றியமைக்கச் செயற்படல்.
இலங்கை என்ற சிறய நாட்டை அமெரிக்காவின் கொள்ளைக்குத் தாரைவார்த்துக் கொடுக்கும் ராஜபக்ச அரசு மறுபுறத்தில் தாங்கள் அமெரிக்காவிற்கு எதிரானவர்கள் என்று சிங்கள மக்களுக்குக் கூறி வாக்குப் பொறுக்கி வருகிறது.
பி.ஆர் நிறுவனம் இல்லாத நிலையில் கூட அமெரிக்க அரசு இலங்கை இனப்படுகொலைக்கும் இனச்சுத்திகரிப்பிற்கும் உதவி வருகின்றது.