Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அமிதாப், ஐஸ்வர்யாராய்,அபிஷேக்பச்சன் ஆகியோர் iifa விழாவில் இருந்து விலகினார்கள்.

வருகிற ஜூன் 2- முதல் 4 வரை கொழும்பில் நடத்தப்படுவதாக இருந்த

iifa என்னும் இந்தியப் படவிழாவின் தூதராக நடிகர் அமிதாப்பச்சன் நியமிக்கப்பட்டிருந்தார். அவருக்கு எதிராக நாம் தமிழர் இயக்கம் போராட்டம் நடத்திய நிலையில் இன்று புதன்கிழமை iifa அமைப்பின் விழாத் தூதுவர் அமைப்பில் இருந்து தான் விலகுவதாகவும் ஐஸ்வர்யராய், அபிஷேக்பச்சன் உள்ளிட்டோர் அவ்விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார். இந்நிலையில் iifa அமைப்பு கொழும்பில் நடத்தும் விழாவுக்கான புதிய தூதராக நடிகர் சல்மான்கான் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

சல்மான் கானுக்கு எதிராக விரைவில் போராட்டம்-சீமான் அறிவிப்பு.

ங்கையின் கொடூர முகத்தை மறைப்பதற்காக இந்திய அரசின் உதவியுடன் இலங்கை அரசு கொழும்பில் சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவை வரும் ஜுன் 2 முதல் 4 ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது.இதில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன்முக்கிய பங்காற்றுவதாகவும்அறிவிக்கப்பட்டிருந்தது.தமிழர்களின்இனப்படுகொலையை மறைப்பதற்காக நடத்தப்படும் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் அமிதாப் கலந்து கொள்வதற்கு கண்டனம் தெரிவித்து எமது நாம் தமிழர் தொண்டர்கள் மும்பையில் உள்ள அமிதாப் அவர்களின் வீட்டு முன் சில வாரங்களுக்கு முன் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அமிதாப் அவர்களைச் சந்தித்து 10 கோடித்தமிழர்களின் உணர்வுகளைப்புரிந்து கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடாது என்று கோரிக்கை மனுவையும் அளித்தனர்.
அதன் தொடர்ச்சியாக மீண்டும் கோரிக்கையை வலியுறுத்தியும் தமிழர்களுக்கு சாதகமாக கொழும்பில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள மாட்டேன் என்று இறுதி முடிவு எடுக்கும் படி வற்புறுத்தியும் நடிகர் அமிதாப் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் மும்பையில் வசிக்கும் பிரதிக்‌ஷா வீட்டின் முன் நேற்று காலை முதல் நாம் தமிழர் இயக்கத்தால் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.நாம்தமிழர் இயக்கத்தின் போராட்டத்தின் விளைவாக அது குறித்து பரீசீலித்த அமிதாப் iifa விருது வழங்கும் கமிட்டியில் இருந்து,அதிலிருந்து விலகிக்கொள்ள விருப்பம் தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக இன்று புதன் கிழமை iifa விருது வழங்கும் கமிட்டியானது அமிதாப் அவர்களை தூதர் பதவியில் இருந்து விடுவித்தது.ஐஸ்வர்யாராய்,அபிஷேக் பச்சன் ஆகியோரும் விலகிக்கொண்டனர்.நடிகர் சல்மான் கான் அவர்களை புதிய தூதராக இன்று காலை நியமனம் செய்துள்ளது.லாரா தத்தா,விவேக் ஓபராய் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து இன்று கருத்து தெரிவித்த நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமான்,தமிழர்களின் ஒப்பாரியும் மரண ஓலமும் ஆட்சியில் இருக்கும் இந்தியர்களுக்கும் அவர்களை அண்டி இருக்கும் திராவிடர்களுக்கும்,சில தமிழர்களுக்கும் புரியாத நிலையில் எங்கோ உத்திரப்பிரதேசத்தில் பிறந்த நடிகர் அமிதாப் அவர்களுக்கு புரிந்திருக்கின்றது.அதனை அவர் உணர்ந்து கொண்டு கொழும்பு சர்வதேச திரைப்பட விழாவிற்கு செல்ல மறுத்திருக்கின்றார்.அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இனி புதிதாகப்பொறுப்பேற்றுள்ள சல்மான்கான்,லாராதத்தா,விவேக் ஓபராய் ஆகியோருக்கு எதிரான போராட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.. .

Exit mobile version