
ஆப்கானின் காவல் விசாரணைப் பகுதியின் மனித உரிமைகள் பிரிவில் சம்பந்தப்பட்ட பெண் அதிகாரி இரண்டு ஆண்டுகள் வேலை செய்துள்ளார்.
கொல்லப்பட்ட அமரிக்கர் ஆப்கானிஸ்தான் போலிஸ் துறையின் ஆலோசகராக வேலை செய்து வந்துள்ளார். 49 வயதான ஜோசெப் கிரிபின் என்ற அதிகாரி, பாதுகாப்புத் துறையில் அமரிக்கா சார்பாக பல நாடுகளில் செயற்பட்டவர்.
நர்கீஸ் என்ற பெண்ணே போலிஸ் தலைமையகத்தில் வைத்து இந்தக் கொலையை நிகழ்த்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் அமரிக்க ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராக பெரும்பாலான மக்கள் மத்தியில் எதிர்ப்புணர்வு மேலும் அதிகரித்து வருவதை இந்தக் கொலைகள் தெளிவாக்குகின்றன. அங்கு அமரிக்க அணியினால் உருவாக்கப்பட்ட நிர்வாக அமைப்புக்களே அமரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக திரும்பியுள்ளன.