Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அமரிக்க நிறுவனங்களின் எண்ணைப்பசிக்கு ஈராக்கில் சாகடிக்கப்பட்ட மக்கள் தொகை : புதிய அறிக்கை

us-imperialismபுள்ளிவிபரங்களாகத் தொகுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஈராக் யுத்தத்தில் 116,903 அப்பாவிப் பொது மக்களும், 4800 அமரிக்கப் படைகளும் கொல்லப்படுள்ளனர் என லான்செற் என்ற பிரித்தானிய மருத்துவ சஞ்சிகைக்கு பொதுச் சுகாதாரத்திற்கான அமரிக்கப் பேராடியர்கள் வழங்கிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

31 ஆயிரம் அமரிக்க இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர். பல ஈராக்கியர்கள் ஊனமுற்றும் படுகாயமடைந்துமுள்ளனர். ஐந்து மில்லியன் ஈராக்கியர்கள் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர். 820 பில்லியன் அமரிக்க டொலர்களிலிருந்து ஒரு ரில்லியன் டொலர்கள் வரைக்கும் ஈரக் போருக்காக அமரிக்க அரசு செலவு செய்திருக்கிறது எனக் கணிப்பிடுகின்றனர். 104000 இலிருந்து 223000 வரையான அப்பாவிப் பொதுமக்கள் வன்முறைகளால் கொல்லப்பட்டிருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் 2008 ஆம் ஆண்டு அறிக்கையில் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைய புள்ளிவிபரங்களின் அடிப்படையில் ஐந்தில் ஒரு பிரித்தானிய மக்கள் முன்னைய பிரதமர் ரொனி பிளேர் போர்க்குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட வேண்டும் எனக் கருதுகின்றனர்.

Exit mobile version