Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அமரிக்க நாணயம் சேடமிழுக்கிறது

dyingdollarஉலகத்தின் நாணயம் வழங்கும் தொகையில் அமரிக்க நாணயத்தின் அளவு தொடர்ச்சியான வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. இன்று உலகின் நாணயச் சந்தையில் ஆறு ரில்லியன் டொலர்கள் பெறுமதியான பணத்தொகை புழக்கத்திலுள்ளது. அதன் 62 வீதத்தை இன்றும் அமரிக்க டொலர்களே ஆக்கிரமித்துக்கொண்டுள்ளது. அமரிக்க டொலர்களின் தொலை 3.2 ரில்லியன் ஆகும். இருந்த போதும் அமரிக்க டொலர் பதினைந்து வருட தொடர் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. ஜப்பானிய யென், சீன யுவான், சுவிஸ் பிராங் ஆகிய நாணயங்கள் சந்ததையை ஆகிரமித்துவரும் அதே வேளை வேறு நாணயங்களும் சந்தையில் அமரிக்க நாணயத்தை நிரப்பிவருவதாக ஐ.எம்.எப் தெரிவிக்கின்றது. அமரிக்க மக்களின் பெரும்பன்மையினர் நம்பவில்லை என்றாலும் டொலர் உலகத்திலிருந்து அகற்றப்படும் நிலை உருவாகிவருவதை நிறுத்தமுடியாது என்று அமரிக்க சந்தை ஆய்வாளர் டிக் போவி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வருடமும் ஒரு ரில்லியன் டொலருக்கு மேல் அதிகரிக்கும் கடன் நாடான அமரிக்காவின் நாணயம் இன்னும் உலக நாணயமாக இருக்க வாய்ப்பில்லை என்று அவர் மேலும் குறிப்பிடுகிறார்.
கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் பெரி எச்சன்கிரீன் கூறுகையில் டொலர் இன்று பாதுகாப்பான நாணயமாகமுதலீட்டாளர்கள் கருதவில்லை என்கிறார்.

பெரும்பாலான பொருளியல் ஆய்வாளர்களின் கருத்துப்படி 2015, 2016 ஆம் ஆண்டுகளில் டொலரின் ஆதிக்கம் முற்றாக வீழ்சியடைய ஆரம்பிக்கும் என்கிறார்.

Exit mobile version