அமரிக்க எதிர்ப்பு அரபு நாடுகளைக் குறிவைத்துத் தாக்கிய கணனி வைரஸ்
இனியொரு...
ஈரான், சிரியா, பஹ்ரெயின் போன்ற அமரிக்க அணிக்கு எதிரான நாடுகளின் அரச துறை மற்றும் தனி நபர்களின் கணனித் தரவுகளை வைரஸ் தாக்கி அழித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுளின் தகவல் தொழி நுட்ப சேவையைக் குறிவைத்துத் தாக்கியுள்ள இந்த வைரஸ் அந்த நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள்ளது.அதே வேளை வைரஸ் எதிர்ப்பு மென் பொருள் நிறுவனமான கஸ்பேர்ஸ்கி இந்தத் தாக்குதலின் பின்னணியில் ஏதாவது அரச துறை இருக்கலாம் என வலுவாக சந்தேகங்களை வெளியிட்டுள்ளது. தகவல்களைப் பெற்றுக் கொண்ட வகையும் அதனை மென்பொருள் வைரசாக மாற்றிய முறையும் அரசு ஒன்றின் தலையீடின்றி நடைபெற்றிருக்காது என இந்த நிறுவனம் கருத்து வெளியிட்டுள்ளது.