2012 ஆம் ஆண்டில் மட்டும் இருபத்தி ஆறாயிரம் இராணுவ உறுப்பினர்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக இந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது. சமூகக் காரணங்களாலும், பழிவாங்கல் குறித்த அச்சத்தினாலும், நீதித்துறை குறித்த சந்தேகங்களாலும் மேலும் பலர் பாலியல் வன்முறை குறித்து முறைப்பாடு செய்யாமலிருக்கலாம் என கருதப்ப்டுகின்றது.
இத்தொகை சேர்த்துக்கொள்ளப்பட்டால் வன்முறைக்கு உள்ளாகுவோரின் தொகை பல மடங்கு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. பாலியல் வன்முறைக்கு எதிரான இராணுவப் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்ட கேணல் ஜேவ் குரூசின்ஸ்கி என்பவரே மே மாதம் ஆறம் திகதி தனது அலுவலகத்திற்கு அருகாமையிலுள்ள பெண் ஒருவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டார் என்பதிலிருந்து அமரிக்க இராணுவத்தின் கட்டுப்பாட்டைப் புரிந்துகொள்ள முடியும்.
ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளை நேரடியாகவும் ஏனைய நாடுகளைத் தமது பினாமிகள் ஊடாகவும் ஆக்கிரமிக்கும் அமரிக்காவினது கோரக் கரங்களை அதன் உள்வீட்டு அருவருப்புக்களிலிருந்தே தெரிந்துகொள்ள முடியும்.