இந்த நிலையில் அமரிக்கப் படையினர் இருவர் துப்பாக்கிகளுடன் கட்டுனாயக்கா விமான நிலையத்தில் வந்திறங்கியுள்ளனர்.
கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட இரு அமெரிக்கர்களும் அமெரிக்கப் படைத்தரப்பைச் சேர்ந் தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட இவ் விரு அமெரிக்கர்களும் கடந்த 18ஆம் திகதி கட்டார் விமான சேவை விமானத்தின் ஊடாக கட்டு நாயக்கா விமானநிலையத்தை வந்தடைந்தபோதே கைது செய்யப்பட்டனர்.
அவர்களின் பொதிகள் கட்டுநா யக்கா விமானநிலையத்தில் சோத னைக்கு உள்ளாக்கப்பட்டபோது அதற்குள் துப்பாக்கி ஒன்று பாகம் பாகமாக கழற்றி வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலி ஸார் தெரிவித்துள்ளனர்.ஆனால் இத் துப்பாக்கி அமெரிக் கப் படைத்தரப்பினரால் பொதுவாக உபயோகிக்கப்படும் எம் 16 ரகத் தைச் சேர்ந்தது என தற்போது தெரிய வந்துள்ளதாக கொழும்பு ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கப் படைத்தரப்பில் பணி யாற்றும் இவ்விருவரும் விடுமுறை யைக் கழிக்கவே கொழும்புக்கு சென்றுள்ளதாகக் கூறியுள்ளபோ திலும், விடுமுறைக்குச் சென்றவர்கள் எதற்குத் துப்பாக்கியை வைத்தி ருந்தார்கள் என்ற கேள்வி எழுப்பப் பட்டுள்ளது.
துப்பாக்கியை விமானத்தில் கொண்டுசெல்வது சட்டப்படி குற்ற மாக கருதப்படும் நிலையில், அமெ ரிக்க விமான நிலையத்தின் பாது காப்பு நடைமுறைகளிலிருந்து தப்பி இவர்கள் துப்பாக்கியை எவ் வாறு எடுத்துவந்திருக்க முடியும் என கொழும்பு பாதுகாப்பு வட்டாரங் களில் கேள்வி எழுந்துள்ளது.இதனால், இவ்விரு அமெரிக் கப் படையினரிடமும் பொலிஸா ரின் உயர்மட்டக் குழுவொன்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இரகசிய நடவடிக் கை எதையும் மேற்கொள்ளும் திட் டத்துடன் இவர்கள் கொழும்புக்கு விஜயம் செய்துள்ளனரா என்ற அச் சம் கொழும்பு பாதுகாப்பு வட்டாரங் களில் ஏற்பட்டுள்ளது. கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து இரு அமெரிக்கப் படையினர் கைதுசெய்யப்பட்டமை குறித்து இலங்கைக்கான அமெரிக் கத் தூதரகம் இதுவரை எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை