Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அமரிக்க ஆயுதப்படைகளால் வடக்கில் மருத்துவமனை திறந்துவைக்கப்பட்டது

hospitalஅமெரிக்க பசுபிக் பிராந்திய கட்டளை பணியகத்தைச் சேர்ந்த லெப்.கேணல் ஸ்சுலெர், லெப்.கேணல் கிலென்டா, கப்டன் றிச்சட்,கப்டன் ஸ்டீபன் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பிரதிதூதுவர் வில்லியம் வெயின் ஆகியோர் கொண்ட பரிவரங்களால் கிளிநொச்சி முழங்காவில் ஆதார மருத்துவமனையும், முல்லைத்தீவு ஒட்டுச்சுட்டான் பிரதேச மருத்துவ மனையும் நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஒரு மருத்துவமனை திறப்பதற்கு அமரிக்க இராணுவ தளபதிகள் இராணுவ உடையோடு அன்னிய நாட்டில் பிரசன்னமாகியிருக்கிறார்கள்.

வன்னி இனப்படுகொலை நடத்தப்படுவதன் பின்புலத்தில் செயற்பட்ட அமரிக்க அரசு அழிக்கப்பட்ட பிரதேசத்தின் இருதயப்பகுதியில் இராணுவப் பரிவாரங்களுடனும் மகிந்த ராஜபக்சவின் மகனுடனும்  மருத்துவமனை திறந்து வைக்கிறார்களா அன்றி அமரிக்க உளவு மையம் திறந்துவைக்கிறார்களா என்ற சந்தேகங்கள் பலருக்கு ஏற்பட்டன.

தெற்காசியாவில் அன்னிய ஏகபோக சக்திகளின் நேரடியான ஆளுகைக்குள் கொண்ட்டுவரப்பட்டுள்ல இலங்கை மேலும் மேலும் அழிக்கப்படுகிறது.

Exit mobile version