Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அமரிக்க ஆதரவு ஜோர்தானில் மகிந்த : தொடரும் சர்வதேச பயங்கரவாத ஒப்பந்தங்கள்

rajapaksa_in_jordanஇலங்கை அரச அதிபரும் இனக்கொலையாளியுமான மகிந்த ராஜபக்ச ஜோர்டானி நாட்டிற்கு வந்திறங்கியுள்ளார். மத்திய கிழக்கில் அமரிக்க ஆதரவு நாடான ஜோர்டான், ஆப்கானிஸ்தானில் அமரிக்க உளவுத்துறையுடன் இணைந்து பணியாற்றும் அதன் நெருக்கமான கூட்டாளி.

ஒரு மாதம் முன்பதாக இலங்கை அரசு கென்ய அரசுடன் இராணுவ ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திட்டது போன்று அமரிக்காவின் நேச நாடான ஜோர்டானுடனும் இராணுவ ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சத்திடலாம் என்ற சந்தேகங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இலங்கை அரசின் தனியார் இராணுவப் படைகள் உலகம் முழுவதும் அரச பயங்கரவாதத்தின் அடியாட்படைகளாகப் பயன்படும் அபாயம் எழுந்துள்ளது.

கோத்தாப்ய ராஜபக்ச தலைமை வகிக்கும் ரக்ணா லங்கா என்ற தனியார் கொலைப்படை அதன் கூட்டணி அமைப்பான அவன்கார்ட் மரிடைம் சேர்விஸ் என்ற தனியார் இராணுவப்படையுடன் இணைந்து இலங்கை இராணுவத்தின் கொல்லும் திறனை உலகம் முழுவதும் அமரிக்க ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் விற்பனை செய்து வருகின்றது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் நெல்சன் மண்டேலாவின் மரணச் சடங்கில் கலந்துகொள்ள முன்பதாக கென்யாவிற்குப் பயணம் மேற்கொண்ட மகிந்த ராஜபக்ச அந்த நாட்டுடன் ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டார். அதில் பிரதானமானது இராணுவ ஒத்துழைப்பாகும். அமரிக்கா தலைமையிலான நேட்டோ இராணுவப் படையில் நம்பிக்கைக்குரிய நாடான கென்யாவுடனான இராணுவ ஒப்பந்ததில் கடற்பிராந்தியப் பாதுகாப்பு பிரதானமானது.

இந்த ஒப்பந்தத்திற்கு ஒரு மாதம் முன்பதாக கென்யாவில் தனது டிஜிபூட்டி இராணுவத் தளத்தைப் அமரிக்கா பலப்படுத்தப் போவதாக அறிவித்தது.

மகிந்த ராஜபக்ச அரசின் ஜோர்டான் பயணமும் இராணுவ ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையிலேயே அமைந்திருக்கலாம் என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
அமரிக்க அரச பயங்கரவாதம் இலங்கை இனக்கொலை அரசின் பயங்கரவாத திறனைப் பயன்படுத்திக் கொள்கிறது.

ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் விசாரணை என்ற பெயரில் அரச பயங்கரவாதிகளின் கூட்டு மறைக்கப்படுகின்றது.

இலங்கை அரசின் சர்வதேச தனியார் இராணுவம் குறித்த விரிவான கட்டுரை:

உலகமயமாகும் கோத்தாவின் கொலைப்படைகள் 

அமரிக்காவின் விமானப்படை ஜோர்டானில்:

https://medium.com/war-is-boring/b424b37cfacf

கென்யாவில் இராணுவத்தைப் பலப்படுத்தும் அமெரிக்கா:

http://www.theeastafrican.co.ke/news/Pentagon-to-boost-its-Kenya-Djibouti-military-bases/-/2558/2079606/-/st6lq5z/-/index.html

கென்யாவுடன் இலங்கை அரச ஒப்பந்தம்:

http://www.gulf-times.com/sri%20lanka/251/details/374822/sri-lanka,-kenya-sign-eight-agreements-to-cement-ties

Jordan emerges as key CIA counterterrorism ally
Exit mobile version