ஜேர்மனியில் மூனிச் நகரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய அமரிக்க வெளியுறவுச் செயலாளர் ஜோன் கெரி, உக்ரையின் மக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழ அவர்களின் போராட்டத்திற்கு அமெரிக்கா உதவி வழங்கும் எனத் தெரிவித்தார். உக்ரெயினில் போராட்டங்களை நடத்தும் குழுக்களான நியோ நாஸிக் குழுக்களுக்கும், பாசிசக் குழுக்களுக்கும் ஜோன் கெரி ஆதரவு தெரிவித்துள்ளார். சிரியாவில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு ஆயுதம் வழங்கும் அமெரிக்க அரசு உக்ரெயினில் நவநாஸிக் குழுக்களை ஆதரிக்கிறது. கறுப்பினத்தவர்களுக்கும், ஐரோப்பியக் குடியேற்றவாசிகளுக்கும், ஏனைய மதத்தவர்களுக்கும் எதிரான வன்மத்தையும் வெறுப்புணர்வையும் உமிழும் உக்ரெயினில் போராட்டம் நடத்தும் வன்முறைக் குழுக்களின் கோரிக்கை உக்ரெயினை சரிந்து விழும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைப்பதாகும்.
பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளிலுள்ள் நவநாஸிக் குழுக்களும் பாசிசக் கட்சிகளும் உக்ரெயின் நாசிச எதிர்க்கட்சிகளுக்கு நேரடியான ஆதரவை வழங்குகின்றன. உக்ரெயின் நவநாசிக் கட்சியும் போராட்டம் நடத்தும் பிரதான கட்சியுமான ஸ்வோபோடாவின் அன்ரன் வொலொஷின் இன் நேர்காணலை இத்தாலிய வெளி நாட்டவர்களுக்கு எதிரான இத்தாலிய நவநாசி பயங்கரவாதக் கட்சியான போர்ஸா நூவ பதிவு செய்துள்ளது. அந்த நேர்காணலில் மேற்கின் நாகரீகத்தைப் பாதுகாக்கும் மையமாக உக்ரையின் உருவாகும் என்றும் அன்னியர்கள் எமது கலாச்சாரத்தை அழிப்பதற்கு எதிராக உக்ரெயின் மக்கள் பாதுகாப்பு யுத்தம் நடத்துகிறார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹிட்லரின் மறு அவதாரமான இக் கட்சிகளை வளர்ப்பது அமெரிக்க அரசும். ஐரோப்பாவும், ஐ.எம்.எப் போன்ற அவற்றின் நிறுவவங்களுமாகும்.
உக்ரேயின் அரசு ஏதோ ஜனநாயக அரசல்ல, ஆனால் நவ பாசிஸ்டுக்களும் ஹில்டரும் அமரிக்க ஆசியுடன் ஐரோப்பாவில் தோற்றம்பெறும் காலம் அபாயகரமானது.