உலகம் முழுவதுமான ரில்லியன் டொலர் முதலீடுகளில் பாரிய இழப்புக்கள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது என ஐ.எம்.எப் எச்சரித்துள்ளது.
‘நான் மிகவும் தெளிவாகக் கூற விரும்புகிறேன். நடந்துகொண்டிருப்பது நல்லதற்கல்ல. அமரிக்க அரச பொறிமுறையில் நல்ல விளைவுக்னெருக்கடிகளை ஏற்படுத்துவதற்கு எதிரான நெருக்கடிகள் காணப்படுகின்றன. இவ்வாறு ஐ.எம்.எப் இன் திணைக்களங்களில் ஒன்றான நாணயம் மற்றும் மூலதனச் சந்தைப் பிரிவின் தலைவரான ஜோஷ் வினால் தெரிவித்தார்.
அமரிக்க உள் நாட்டு மொத்த உற்பத்தி குறித்த எதிர்வு கூறலை ஐ.எம்.எப் இன்று வெளியிட்டது. 2013 – 2014 இல் உள் நாட்டு மொத்த உற்பத்தி குறித்த மதிப்பீடு முன்னைய மதிப்பீட்டை விட 0.2 வீதத்தால் குறைவடையும் என ஐ.எம்.எப் கூறியுள்ளது.
இந்த மதிப்பீட்டை வெளியிடும் போதே மேற்கண்ட கருத்துக்களை அவர் வெளியிட்டார்.
பல்தேசிய வியாபார நிறுவனங்கள் அரசுகளைக் கூட விலைக்கு வாங்கும் நிலைக்கு ஐரோப்பிய அமரிக்கப் பொருளாதாரங்கள் நகர்ந்து செல்கின்றன. கிரேக்கத்தில் பல்தேசிய நிறுவனங்களின் தெரிவிற்கு ஏற்ப நியமிக்கப்பட்ட பொம்மை அரசு மக்களிடமிருந்து எஞ்சியிருக்கும் உழைப்பையும் பணத்தையும் பறித்துக்கொள்வதற்கான சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சரிந்து விழுந்து கொண்டிருக்கும் அமரிக்க அரசையும் அதன் ஏகபோக ஆதிக்கத்தையும் மறுசீரமைக்க பல்தேசிய இராட்சத வியாபார நிறுவனங்களும் வங்கிகளும் மக்களின் உழைப்பையும் உயிரையும் விலைபேசிக்கொண்டிருக்கின்றன.
பல்தேசிய நிறுவனங்கள் நேரடியாக மக்களை ஆட்சி செய்வதற்கான ஒழுங்கு முறையை புதிய உலக ஒழுங்கு என அழைக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. பணக்கார நாடுகள் என குறியிடப்பட்ட மேற்கு நாடுகளிலும் மக்கள் பட்டினிச் சாவை எதிர் நோக்கவேண்டிய நிலை தோன்றியுள்ளது. இழப்பதற்கு தமது உயிரைத் தவிர வேறெதுவும் இல்லை என்ற நிலைக்கு நகர்த்திவரப்பட்ட மக்கள் போராடுவதைத் தவிர வேறுவழிகள் இல்லை. இவ்வாறான போராட்டங்களை எதிர்கொள்ள நிறவாதம், மதவாதம் போன்றவை மட்டுமல்ல பாசிச அரசுகளும் உருவாகின்றன.