Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அமரிக்க அதிகாரமும் மக்கள் எழுச்சியும் 121 அப்பவிகளின் மரணமும்.

யெமெனில் மக்கள் எழுச்சிக்கு முகம்கொடுக்க முடியாத ஜனாதிபதி தான் ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் தென் யெமெனில் வெடிபொருட்கள் உற்பத்தித் தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டு 121 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். விபத்து நடந்ததும் பல வழிகளில் அல் கைதாவைத் தொடர்புபடுத்தி யெமன் அரசு அறிக்கைகளை விடுத்தன. பின்னதாக அமரிக்க அரசுச் செயலர் ரொபெட் கேச்ட்சும் இதன் பின்னணியில் அல் கைதாவே செயற்படுவதாகக் குற்றம் சுமத்தினார். சவுதி  அரபியாவினூடாக  லிபியாவில் அல் கைதாவிற்கு அமரிக்க அரசு ஆயுதங்கள் வழங்குவதாக இன்டிபென்டன் உட்பட பல பிரித்தானியப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.
பதவி விலகலுக்கு ஒப்புதல் தெரிவித்திருந்த யெமன் ஜனாதிபதி இப்போது மறுப்புத் தெரிவிக்கிறார்.

Exit mobile version