அணுகுண்டுகளை வீசுவதற்கான யுத்த விமானங்களைப் 2024 ஆம் ஆண்டு வரை பாதுகாப்பதற்கு ஜேர்மனிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த அணுகுண்டு விமானத்தைப் பாதுகாப்பதற்கான செலவு 314 மில்லியன் அமரிக்க டொலர்கள். இப்பணம் மக்களின் வரிப்பணத்திலிருந்தே செலவாகின்றது.
கூடங்குளத்திலிருந்து ஜேர்மனி வரை மக்கள் பணத்தில் மக்கள் அழிவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அதிகாரவர்க்கம் செய்துவருகிறது.
2014 ஆம் ஆண்டுக்குள் அணுகுண்டுகளை வீசி உலகத்தின் ஒருபகுதியையாவது அழித்துவிட்டு அபிவிருத்தி குறித்து சிந்திக்க பல்தேசியக் நிறுவனங்களும் அமரிக்க ஜேர்மனிய அரசுகளுக்கு உத்தரவிட்டாலும் வியப்படைவதற்கில்லை.
சிக்காகோவில் நடைபெற்ற நேட்டோ நாடுகளின் உச்சி மாநாட்டில் அணு ஆயுதங்களே நேட்டோ நாடுகளின் மையப்பாதுகாப்பு என்றும் இப்போது இந்த நாடுகளின் கைவசம் இருக்கும் அணு ஆயுதங்கள் யுத்தம் புரியப் போதுமானவை எனவும் முடிவெடுக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.