Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அமரிக்க அடியாளான ஐ.நா இனப்படுகொலைக்கு ஆதரவு?

வன்னிப் படுகொலைகள் காலத்தின் போது ஐ.நா இன் செயற்பாடுகளை ஆராய்வதற்காக ஒருவரை ஐ.நா நியமித்தது.
ஒரு நபர் விசாரணைக் குழுவின் அறிக்கை, ஐ.நாவினால் மறைக்கப்பட்டு விட்டதாக இன்னர்சிற்றி பிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
சிறிலங்காவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட போரில் ஐ.நாவின் செயற்பாடுகள் குறித்து ஆராய எகிப்தைச் சேர்ந்த தொராயா ஒபெய்ட் என்ற உயர் அதிகாரியை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்திருந்தார்.
கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் இவருக்கு பணி ஆணை வழங்கிய ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், நான்கு மாதங்களில் விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.
எனினும், அவர் விசாரணைகளை ஆரம்பிக்கவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் அந்தப் பணியை செய்ய முடியாதுள்ளதாக அறிவித்ததை அடுத்து, சார்ள்ஸ் பெற்றி என்ற அதிகாரி இந்தப் பணிக்கு நியமிக்கப்பட்டார்.
எனினும், குறிக்கப்பட்ட காலஎல்லை கடந்து, 9 மாதங்களாகிம் இந்த அறிக்கை இன்னமும் வெளியிடப்படவில்லை.

Exit mobile version