Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அமரிக்கா மீள முடியாத நெருக்கடியை நோக்கிச் செல்கிறது : இப்போது கூறுபவர் அந்த நாட்டின் திறை சேரியின் செயலாளர்

gold-dollar-coinsஅமரிக்க கடனை மீளச் செலுத்தத் தவறும் பட்சத்தில் மீள ,முடியாத சேதம் ஏற்படும் அமரிக்க திறைசேரியின் செயலாளர் எச்சரித்துள்ளார். இதுவரைகும் கண்டிராத விளைவுகளை கடன் நெருக்கடி ஏற்படுத்தும் என் ஜக் லியூ இன்று செனட் சபையின் நிதிக் குழுவின் முன்னிலையில் தெரிவித்தார். நூறு மில்லியன் பெறுமானமுள்ள பண முறிகள் ஒவ்வொரு வாரமும் புதுப்பிக்கப்படுகின்றன. இதனையே திறைசேரியின் கடன் என்று அழைக்கிறார்கள். ஒவ்வொரு வாரமும் முதலீட்டாளர்கள் இத் தொகையை திறை சேரிக்கு கடனை கொடுத்து வாங்கும் நிலையிலேயே உள்ளனர். இதனால் அமரிக்காவின் கடன் தொலையான 17 ரில்லியன் மேலும் அதிகரிக்கவில்லை.
பண முறிகளைப் பெற்றுகொள்ளும் வட்டி வீதம் கடந்த செவ்வாயிலிருந்து மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இன்றுள்ள நிலையில் முதலீட்டாளர்கள் தமது பணத்தை மீளப் பெறக் கோரினால் உடனடியாகவே திறை சேரியின் முழு இருப்பும் சிதறும் நிலை ஏற்படும். ஒக்டோபர் 17ம் திகதிக்கும் நவம்பர் முதலாம் திகதிக்கும் இடையில் அரச ஊழியர்களின் ஊதியம், மருத்துவத் துறைச் செலவுகள், இராணுவ மற்றும் பாதுகாப்பு ஊதியம், சமூக உதவித் தொகைகள் என்று பெரும் தொகையான பணம் செலவிடப்பட வேண்டும். எமது கடன் பெறும் எல்லையை உயர்த்தத் தவறினால் இச் செலவுகளை ஈடுசெய்ய முடியாமலிருக்கும். ஊதியத்தைக் கூட வழங்க்க முடியாது. என அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனநாயகக் கட்சிக்கும் குடியரசுக் கட்சிக்கும் இடையேயான மோதலாக இப் பண நெருக்கடி வெளிக்காட்டப்பட்டாலும் இந்த நெருக்கடி தீர்வற்ற நிலையை வந்தடைந்துள்ளது. சோவியத் ஒன்றியம் எதிர்பாராத சில மாதங்களுக்குள் சிதறியதைப் போன்று அமரிக்க ஏகபோகமும் சிதறிப்போகும் நிலை உருவாகும்.

Exit mobile version