Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அமரிக்கா சரத் பொன்சேகவையும் ஏமாற்றியது!

இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யவில்லை எனவும் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை எனவும் அமெரிக்கா அறிவித்துள்ளது. முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா விடுதலை தொடர்பில் அமெரிக்கா அழுத்தங்களை பிரயோகிப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் அமெரிக்க தூதரக அதிகாரி நடத்திய சந் திப்பின் போது சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரப்பட்டிருந்ததாகவும் அமெரிக்க தூதரக அதிகாரி ஒரு வர் தெரிவித்துள்ளார்.
எனினும் மைத்திரிபால சிறிசேனவுடன் நடைபெற்ற சந்திப்பு சரத்பொன்சேகாவை விடுதலை செய்வதற்காக அல்ல எனக் குறிப்பிட்டுள்ளதுடன் பல்வேறு விடயங்கள் பற்றி பேசப்பட்டதாகவும் அவை தொடர்பில் கருத்து வெளியிட முடியாது எனவும் அமெரிக்க தூதரக அதிகாரியயாருவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக ஜனநாயக முற்போக்கு சக்திகளின் இலங்கை இனப்பிரச்சனை குறித்த அக்கறை இன்மை காரணமாக அமரிக்கா போன்ற ஏகபோக வல்லூறுகள் பிரச்சனைகளத் தமக்குச் சார்பானதாக மாற்றியுள்ளன.
இலங்கை அரசிடமிருந்து வேண்டியதைப் பெற்றுக்கொள்ள அழுத்ததைப் பிரயோக்கும் அமரிக்க போன்ற வல்லூறுகள் உலகின் போராடும் மக்கள் அனைவருக்கும் எதிரானவையே.
இலங்கை அரசிற்கும் உலக ஏகதிபத்தியங்களுக்கும் எதிரான உலக அளவிலான ஜனநாயக முற்போக்கு சக்திகளின் இணைவை மக்களுக்கு அரசியல் பாடங்களாக இவ்வாறான நிகழ்வுகள் கற்றுத் தருகின்றன.

Exit mobile version