Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அமரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் இலங்கை மத்திய வங்கி ஒப்பந்தம்

அமரிக்க, ரஷ்யா, அவுஸ்திரேலியா, பெல்ஜியம், பங்களாதேஷ், கனடா, இந்தியா, மலேசியா, தென்கொரியா, இந்தோனேஷியா, ஆப்கானிஸ்தான், நேபாளம், கம்போடியா, பிஜி, ஸ்லோவேனியா, தென் ஆபிரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளுடன் நிதிப் புலனாய்வுத் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தங்களில் இலங்கை மத்திய வங்கி கைச்சாத்திட்டுள்ளது.
இந்த உடன்படிக்கைகளின் மூலம் சட்ட விரோதமான நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் பயங்கரவாத நிதி கொடுக்கல் வாங்கல்களை தடுக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சர்வதேச ரீதியான புரிந்துணர்வின் மூலம் இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க முடியும் என மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
உலகம் எங்கும் கிளைபரப்பியுள்ள வங்கி தனது சட்டவிரோதக் கொடுக்கல் வாங்கல்கள் தெரிய வந்த வேளையில் மன்னிப்புக் கோரியமை தெரிந்ததே. ராஜபக்ச குடும்பம் சட்டவிரோத நிதியினதும் போதை வஸ்து பணக் கொடுக்கல் வாங்கல்களோடும் நேரடியாகத் தொடர்புபட்டது என்ற சந்தேகம்நிலவுகிறது.

Exit mobile version