அமரிக்காவைத் தொடர்ந்து பிரான்சும் போர்க்குற்றவாளிகளுக்கும் இனப்படுகொலையின் சூத்திரதாரிகளுக்கும் ஆதரவான நிலைப்பட்டை முன்வைத்துள்ளது. இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பிற்கும் அதன் போது நடைபெற்ற போர்க்குற்றங்களும் இலங்கை அரசின் உத்தரவின் அடிப்படையிலேயே இடம்பெற்றது.
ஐகிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கையில் போர்க்குற்றங்களை இலங்கை அரசே விசாரணை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இலங்கை சென்ற அமரிக்கப் பிரதிநிதி ரொபேர் ஒ பிளக் இதே கருத்தை வலியுறுத்தினார். இதே வேளை இன்னசிற்டி பிரஸ் ஊடகத்தின் கேள்வியொன்றிற்குப் பதிலளித்த ஐ.நாவுக்கான
பிரான்ஸ் இன் பிரதிநிதி ஜெராட் அராவுட் ஒரே வகையான கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
சிறீலங்காவில் இனநல்லிணக்கப்பாடுகள் ஏற்படவேண்டும் என்றால் அவர்கள் போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளை தாங்களே மேற்கொள்ளலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஒடுக்கப்பட்ட மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் என்பது