Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அமரிக்காவில் ரயில் முன்னால் இந்தியர் ஒருவரைத் தள்ளிக் கொலைசெய்த பெண்

அமெரிக்காவின் குயின்ஸ் பகுதியில் சுரங்க ரயில் முன்பாக ஒரு இந்தியரை தள்ளி அமரிக்கப்பெண் கொலை செய்துள்ளார்.
அமெரிக்க குயின்ஸ் பகுதியில் வசித்து வந்தவர் சுனந்தோ சென் (46). இந்தியரான இவர், அங்கு அச்சக தொழில் செய்து வந்தார். கடந்த வியாழக்கிழமை குயின்ஸ் சுரங்க ரயில் நிலையத்துக்கு சென்ற சுனந்தோ, அங்கு ரயிலுக்காக பிளாட்பாரத்தில் காத்திருந்தார்.
அப்போது, ரயில் வேகமாக வரவும், அவரை திடீரென பின்னால் இருந்து ஒருவர் ரயில் முன் தள்ளிவிட்டார். ரயிலில் அடிபட்டு சுனந்தோ சென் இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். ரயில் நிலையத்தில் பதிவாகி இருந்த வீடியோ காட்சிகளை போலீசார் ஆராய்ந்தனர். இதில் சுனந்தோ சென்னை, ரயில் முன் தள்ளி கொன்றது ஒரு பெண் என்று தெரியவந்தது. அவர் அதே ரயில் நிலைய பிளாட்பாரத்தில் அமர்ந்திருந்த காட்சிகளும், தனக்குத்தானே முணுமுணுத்தபடி இருக்கும் காட்சிகளும் பதிவாகி இருந்தன.
பின்னதாகக் கைதான இந்தப் பெண், உலக வர்த்தக மைய கட்டிடம் இடிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, இந்துக்களையும் முஸ்லிம்களையும் தனக்கு பிடிக்காததால் இக்கொலையை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
அமரிக்க அரசு இரட்டைக் கோபுரத் தாக்குதல்களின் பின்னர் முஸ்லீம்கள் மீது ஏனைய வெளிநாட்டவர் மீதும் தவறான கருத்துக்களைப் பரப்பிவருகிறது. சில ரயில் நிலையங்களில் விளம்பரங்கள் கூட வெளி நாட்டவர்களை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளது. அமரிக்க அரசு சிறிது சிறிதாக நாஸி முறையிலான வெறுப்புணர்வை முஸ்லிம்கள் மீதும் ஏனையோர் மீதும் பரப்பிவருகிறது என்று அரசியல் ஆய்வாளர் ரண்டி ஷோர்ட் குறிப்பிட்டார்.

Exit mobile version