வால் மார்ட்டின் கடைகள் வெறுமையாகக் காணப்படுகின்றன. இது குறித்து வால் மார்ட்டின் உள்ளக தொடர்பாடல் ஒன்று வெளியாகி அமரிக்காவில் பரபப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஏனைய சில்லரை வணிக பல்தேசிய நிறுவனங்களில் பல இவ்வருடம் மூடப்படும் நிலைக்கு வந்துள்ளன. பெஸ்ட் பை நூற்றுக்கணக்கான நிறுவனங்களை மூடுவதாக அறிவித்துள்ளது.
அமரிக்க தனி நபர் வருமானம் கடந்தவருட டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது 50- 55 பில்லியன் டொலர்கள் குறைவடைந்துள்ளது.
கடந்த 20 வருடங்களில் இவ்வ்வளவு அதிகமாகக் குறைவடைந்துள்ளது இதுவே முதல் தடவை என தெரிவிக்கப்படுகின்றது.
அமரிக்க மக்களை ஒட்டச் சுரண்டிய இந்த நிறுவனங்கள் ஆசிய ஆபிரிக்க நாடுகளைக் குறிவைத்து நகர்கின்றன. இவற்றைப் புரிந்துகொள்ளாத அப்பாவிப் பொதுமக்கள் இப் பல்தேசிய நிறுவவங்களின் அடிவருடிகளை இனம்கண்டு கொள்வதில்லை. பலமிழக்கும் ஏகாதிபத்தியங்கள் புதிய பாசிச உலகம் ஒன்றை மக்கள் மீது திணித்துவருகின்றன. அரசுகளின் நேரடியான நெறியளர்களாக பல்தேசிய நிறுவனங்களே திகழ்கின்றன.
துணைத் தகவல்கள்:
http://www.bloomberg.com/news/2013-02-27/wal-mart-s-slowness-stock-shelves-worsens-as-sales-stay-s.html
http://theeconomiccollapseblog.com/archives/retail-apocalypse-why-are-major-retail-chains-all-over-america-collapsing