
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அழைப்பின் பேரில் அங்கு பல மட்டங்களில் நடத்திய பேச்சுவார்த்தைகள் எமக்கு பூரண திருப்தியைத் தந்துள்ளன. அந்த திருப்தியுடனே நாம் கனடா வந்துள்ளோம். இங்கும் கனடிய வெளிவிவகார அமைச்சர் மற்றும் அமைச்சின் கொள்கையாக்கல் அதிகாரிகள் ஆகியோரோடு எதிர் வரும் திங்கட் கிழமை ஒட்டாவா மாநகரில் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளோம்.
அத்துடன் கனடாவில் இயங்கிவரும் தமிழ்த்தேசியகூட்டமைப்பின் கிளை முக்கியஸ்த்தர்களோடு கலந்துரையாடல்களை நடத்தி எமது அமைப்பின் எதிர்காலத்திட்டங்கள் பற்றி ஆராயவுள்ளோம்’
இவ்வாறு நேற்று சனிக்கிழமை இரவு கனடாவின் ரொரென்ரோ பியர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு மாவை சேனாதிராஜா கேள்விகளுக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார்.
தமிழ்ப் பேசும் மக்களின் அரசியல் தலைமைகள்:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமரிக்காவில் – இன்னொரு முறை இரத்தக்கறை : அஜித்