அமெரிக்காவில் இளைஞர்கள் முகங்கொடுக்கும் நிலைமை குறிப்பிடத்தக்க வகையில் மோசமாக உள்ளது. 25 வயதிற்கு குறைந்த தொழிலாளர் பிரிவினரிடையே தொழிலாளர்கள் பங்கு பெறும் சதவிகிதம் மார்ச் மாதம் 54.5 ஐ தொட்டது. இது நான்கு தசாப்தங்களில் மிகவும் குறைந்த அளவு ஆகும். கணக்கீட்டின்படி உண்மையான இளைஞர் வேலையின்மை, தொழிலாளர் பிரிவில் இருந்து நீங்கியவர்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், 22.9 சதவிகிதம் ஆகின்றது.
இதே வகையான கொள்கையை பிரித்தானியாவில் கடந்த மாதம் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டமும் முன்வைத்துள்ளது. ஐரோப்பிய அமரிக்க மக்களின் வாழ்க்கைத் தரம் வறுமை என்பன மேலும் அதிகரிகும் என எதிர்வுகூறப்ப்படுகிறது.