ஒரு வாரத்தில் பெருந்தொகையான வேலையிழப்புப் பதிவு செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் தடவை. இந்தத் தொகை இன்னும் அதிகரிக்கும் எனக் கணிப்பிடப்பருகின்றது.
யேல் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஜேகப் ஹக்கர் தலைமையிலான குழு ஒன்று மேற்கொண்ட ஆய்வில் அமரிக்கப் பொருளாதார நெருக்கடி பரந்த அளவிலும் ஆழமானதாகவும் சென்று கொண்டிருப்ப்தாகக் குறிப்பிட்டார்.
இதே வேளை பல் தேசிய நிறுவனங்களில் இலாபம் பல மடங்காக அதிகரித்துள்ளதாக வால் ஸ்ரிட் வர்த்தக அறிக்கை குறிப்பிடுகிறது. 2011 ஆம் ஆண்டு பெரு நிறுவனங்கள் $824 பில்லியன் தொகையை லாபமாகப் பெற்றுச் சாதனை படைத்துள்ளன.