Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அமரிக்கத் தேர்தல் : அழிப்பவரை தெரிவு செய்வதற்கான நாள்

உலகத்தின் ஒவ்வோர் மூலையையும் அடக்கியாளும் அமரிக்க ஜனநாயகத்திற்கான அதிபர் தேர்தலில் மக்கள் இன்று வாக்களிக்கின்றனர். வாக்களர்களின் எண்ணிக்கை கடந்த தேர்தலை விட அதிகமாகக் காணப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த நான்கு தசாப்தங்களாக அமரிக்காவின் தேர்தல் நடைமுறை அங்கு ‘தீவிர வலதுசாரிக் கட்சியாகக்’ கணிக்கப்படும் குடியரசுக் கட்சியின் கட்டுப்பாடிலேயே இயங்குகிறது. இதனால் பல தடவைகள் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் ஆட்சிக்குவரும் வாய்ப்பை இழந்ததாகக் கூறப்படுகிறது. நடைபெறும் தேர்தலில் அடிப்படைவாதக் கருத்துக்களை முன்வைத்த மிட் ரோம்னியின் மகன் டாக் ரோம்னியின் பங்கு தாரராக உள்ள நிறுவனம் ஒன்றே 50 தொகுதிகளுக்கான வாக்குப் பதியும் இயந்திரங்களை வினியோகம் செய்வதால் வாக்குப் பதிவில் மோசடிகளை நடத்த வாய்ப்புண்டு என பல ஊடகங்கள் கருத்து வெளியிட்டன.
ஜோர்ஜ் புஷ் இன் பின்னர் ஒபாமா ஆட்சியிலேயே உலகம் இராணுவத் தாக்குதல்களுக்கு உள்ளானது. மத்திய கிழக்கில் சாரிசாரியாக மக்கள் கொல்லப்பட்டனர். அமரிகா போலீஸ் அரசாக மாற்றமடைந்தது. ஒபாமா உருவாக்கிய அடிப்படைவாதக் கருத்துக்களே ரோம்னியின் செல்வாக்கை அதிகரித்தது.

Exit mobile version