லத்தீன் அமரிக்க நாடுகளின் கூட்டமைப்பான ALBA தன்னார்வ நிறுவனங்களுக்கு நிதி வழங்கும் United States Agency for International Development (USAID) என்ற அமைப்பை உடனடியாக உறுப்பு நாடுகளிலிருந்து வெளியேறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. அமரிக்க நிகழ்ச்சி நிரலுக்கு இசைவடையாத நாடுகளின் அரசுகளையும் அமைப்புக்களையும் பலவீனப்படுத்தி தலையீடுகளை மேற்கொள்ளும் முன் நிபந்தனைகளை ஏற்படுத்தும் இந்த நிறுவனத்தை தமது உறுப்பு நாடுகளில் அனுமதிக்க வேண்டாம் என இந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. நிக்காரகுவா, கியூபா, போலிவியா, எக்குவடோர், வெனிசூலா, டொமினிக்கா போன்ற நாடுகள் இந்த அறிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.