Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அப்பாவிகளை கொடுமைப்படுத்தி கொலைகள் செய்யும் சிறப்பு முகாம்

tamilrefufeeதிருச்சி சிறப்பு முகாமில் இருந்து மூன்று மாதத்திக்கு முன்பு விடுதலையான , இலங்கையை சேந்த பட்டுகுணராஜ் த\பெ செபமாலை (வயது 50) அவர்கள் 20.10.2014 அன்று மாலை 3 மணிக்கு கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் (GH) இயற்கை ஏய்தினார்.

இவர் கடந்த இரண்டு வருடமாக சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தார் . உடல் நலக்குறைவுகாரணமாக பலதடவை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுசிகிச்சை பெற்று வந்தார் . மேல்சிகிச்சைக்காக மருத்துவர்கள் சென்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்தும் அகதிகள் தனித் துணை மாவட்ட ஆட்சியர் நடராஜ் அவர்கள் மறுத்துவிட்டார் .பின் செய்தியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் பேசியதன் பயனால் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு மாவட்ட ஆட்சியாளர் அனுமதி வழங்கினார்.

உரிய காலநேரத்தில் தகுந்த போதிய சிகிச்சை வழங்காததினால் இவர் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என தஞ்சை மருத்துவமனையில் மருத்துவர்கள் கை விரித்து விட்டனர். இருந்தும் 15 நாட்கள் அங்கு அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவம் வழங்கப்பட்டது. உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றநிலை ஏற்பட்ட போது அவரை அவசரமாக சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்தனர்.

இந்நிலையில் சிறப்பு முகாமில் இருந்து விடுதலையாகி மூன்று மாதங்களாக பல்வேறு மருத்துவ மனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த போதும் சிகிச்சை பலனின்றி 20.10.2014 அன்று உயிரிழந்துள்ளார்.

பட்டு குனராஜ் சிறப்பு முகாமில் அடைத்து வைக்க பட்டிருந்த போது உரிய நேரத்தில் சிகிச்சை ஒழுங்கு செய்யாது அலட்சியப்படுத்தி அவரின் இறப்புக்கு அகதிகள் தனித்துணை மாவட்ட ஆட்சியர் நடராஜ் அவர்களே காரணமாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அகதிகள் தனித்துணை மாவட்ட ஆட்சியர் நடராஜ் தொலைபேசி இலக்கம் 9655473489
மேலும் தகவலுக்கு ஈழ நேரு 8122221286

– ஈழ நேரு

Exit mobile version