சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு ஆதரவாக வாக்களித்தற்காக திமுக தலைவர் கருணாநிதிக்கு தனது நன்றியைத் தெரிவிக்குமாறு சோனியா காந்தி பாலு குழுவினரிடம் கூறியுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியதன் ஆரம்பப் புள்ளி 60 களில் உருவான பெரு வர்த்தக நிறுவனங்களில் கட்டுக்கடங்காத பணக்கொள்ளை எனக் கணிப்பிடப்படுகிறது. டெஸ்கோ, வால்மார்ட், கார்பூர் போன்ற பல பில்லியன் பெறுமானமுள்ள நிறுவனங்களின் ஆக்கிரமிப்பால் இக்காலப்படுகுதியில் பல சிறிய மற்றும் மத்தியதர விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட வரலாறு உண்டு.
சமூக நலத்திட்டங்கள் படிப்படியாக நீக்கப்பட்டு மூழ்கிக்கொண்டிருக்கும் இத்தாலியின் பாரம்பரிய உணவு உற்பத்தியாளர்களின் சில்லறைவியாபாரம் 95.8 பில்லியன் யூரோக்கள் என அறிந்துகொண்ட பல்தேசிய நிறுவனங்கள் இந்த தொழிலை 2005ம் ஆண்டிலிருந்து கையகப்படுத்த ஆரம்பித்தன. இதனால் பாதிக்கப்பட்ட நடுத்தர விவசாயிகளின் வாழ்க்கை அவல நிலைக்கு உள்ளாகியுள்ளது.
இந்தியா போன்ற வறிய நாடுகளை ஒட்டச் சுரண்டும் அன்னிய முதலீடு இந்தியாவிற்கு பாரிய இளப்புக்களை ஏற்படுத்தும் திட்டமிட்ட பகல் கொள்ளை.