இதே வேளை வெற்றியை கொண்டாடுவதற்காக இனக்கொலையாளியும் ஹிட்லர் போன்ற சர்வாதிகாரிகளைப் போற்றும் ஆ.எஸ்.எஸ் படையின் உறுப்பினருமான நரேந்த்திர மோடி கலந்துகொள்கிறார்.
மோடிக்கு விசா வழங்க மறுக்கும் அமரிக்க அரசு மறுபுறத்தில் தனது பல்தேசிய நிறுவனங்கள் ஊடாக பாரதீய ஜனதாவை ஆதரிக்கிறது. அமரிக்கா தனது நேரடித் தலையீடுகளையும், நேரடி காலனிகளையும் இன்று உருவாக்கிவருகிறது. முதலில் சர்வாதிகாரிகளையும் பாசிஸ்டுக்களையும் திட்டமிட்டு உள் நாடுகளில் உருவாக்கும் ஏகாதிபத்தியங்கள், மனித உரிமை மீறலை மிரட்டும் கருவியாகப் பயன்படுத்தி நாடுகளை ஆக்கிரமிக்கின்றன.
சிரியாவில் ஆசாத்தையும், ஈராக்கில் சதாம் ஹுசைனையும் உருவாக்கிய அமரிக்கா இன்று அந்த நாடுகளில் இரத்தக் களரியையும் தமது நேரடி ஆக்கிரமிப்பையும் மேற்கொண்டுள்ளன. பாசிசத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் எதிரான போராட்டங்களைத் தாமது கைகளில் எடுத்துகொள்ளும் அமரிக்க ஏகாதிபத்தியம் உள் நாடுகளில் ஜனநாயகத்திற்கான போராட்டங்களைப் பலவீனப்படுத்துகிறது.
அனைத்து மாநிலங்களிலும் பாசிஸ்ட் மோடியின் கட்சிக்கு கிடைத்த வெற்றியை மோடிக்குக் கிடைத்த வெற்றியென இந்து வெறிக் கட்சி கொண்டாடுகிறது. இன்று மோடி குஜராத்தில் இருந்து புறப்பட்டு டில்லி வந்தார். இவரை பா.ஜ., மூத்த நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கின்றனர். தேர்தல் முடிவுகள் மற்றும் எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய முடிவுகள், வெற்றி பெற்ற மாநிலங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பான விஷயங்கள் குறித்து இன்று பா.ஜ., பார்லி., குழு கூட்டத்தில் வாதிக்கப்படுகிறது.